இதனால் தங்கம் வாங்க திட்டமிட்டிருந்த பலரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தங்கம் மட்டும் இல்லாமல் வெள்ளியின் விலையும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் விலையை பொறுத்தவரையில், நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.13,450-க்கும், ஒரு சவரன் ரூ.107,600 விற்பனை செய்யப்பட்டது. நேற்று காலை கிராமுக்கு ரூ.160-ம், சவரனுக்கு ரூ.1,280-ம் உயர்ந்தது. பிற்பகலில் மேலும் கிராமுக்கு ரூ.290-ம், சவரனுக்கு ரூ.2,320-ம் அதிகரித்தது. நேற்று ஒரே நாளில் மட்டும் தங்கம் கிராமுக்கு ரூ.450ம், சவரனுக்கு ரூ.3,600 உயர்ந்து பேரதிர்ச்சியை கொடுத்தது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.730-ம், சவரனுக்கு ரூ.5,840-ம் அதிகரித்தது.