ஆனால் தட்கல் டிக்கெட் வாங்கிய பிறகு பலருக்கும் வரும் பெரிய சந்தேகம், “இதை ரத்து செய்தால் ரீஃபண்ட் கிடைக்குமா?” என்பதுதான். தட்கல் டிக்கெட்டுகளுக்கான ரத்து விதிகள் சாதாரண டிக்கெட்டுகளைவிட கடுமையானவை. பலர் “ரத்து செய்தால் குறைந்தபட்சம் ஒரு பகுதி தொகை திரும்ப வரும்” என்று நினைப்பார்கள். ஆனால் தட்கலில் அது எல்லா நேரமும் நடக்காது. குறிப்பாக உறுதிப்படுத்தப்பட்ட தட்கல் டிக்கெட் என்றால், அதை நீங்கள் உங்கள் விருப்பப்படி ரத்து செய்தால் பெரும்பாலான சூழ்நிலையில் பணம் திரும்ப கிடைக்காது. திட்டம் மாற்றம், தேதி தவறு, ரயில் தவறுதல் போன்ற காரணங்கள் இருந்தாலும் ரீஃபண்ட் கிடைக்க வாய்ப்பு குறைவு.