மினிமம் பேலன்ஸ் இல்லாத வங்கிகள் இவைதான்.. முழு லிஸ்ட் இதோ!

Published : Aug 12, 2025, 03:51 PM IST

சில வங்கிகள் குறைந்தபட்ச இருப்புத் தொகை விதியை நீக்கியுள்ளன, மற்றவை அதை உயர்த்தியுள்ளன. ரிசர்வ் வங்கி, குறைந்தபட்ச இருப்புத் தொகையை நிர்ணயிக்கும் அதிகாரத்தை ஒவ்வொரு வங்கிக்கும் வழங்கியுள்ளது.

PREV
15
மினிமம் பேலன்ஸ்

பொதுவாக அனைத்து வங்கிகளும், சேமிப்பு கணக்கில் ஒரு குறைந்தபட்ச இருப்புத் தொகையை வைத்திருக்க வேண்டும் என வாடிக்கையாளர்களுக்கு நிபந்தனை விதிக்கின்றன. இதை பின்பற்றினால், வங்கிகள் அபராதம் வசூலிப்பது வழக்கம். ஆனால், வாடிக்கையாளர் வசதிக்காக சில அரசு வங்கிகள் இந்நிபந்தனையை நீக்கியுள்ளன. மேலும், ரிசர்வ் வங்கி (RBI) தற்போது குறைந்தபட்ச இருப்புத் தொகையை நிர்ணயிக்கும் அதிகாரத்தை ஒவ்வொரு வங்கிக்கும் தனியாக வழங்கியுள்ளது.

25
குறைந்தபட்ச இருப்புத் தொகை

சேமிப்பு கணக்கை வைத்திருக்கும் ஒவ்வொருவரும், வங்கியின் விதிமுறைக்கு ஏற்ப ஒரு குறிப்பிட்ட தொகையை எப்போதும் கணக்கில் வைத்திருக்க வேண்டும். இது குறைவாக இருந்தால், வங்கிகள் பராமரிப்பு கட்டணமாக அபராதம் விதிக்கலாம். இந்த தொகை வங்கிக்கு வங்கி மாறுபடும். ஏடிஎம், மொபைல் பேங்கிங், வாடிக்கையாளர் சேவை போன்ற வசதிகளை பராமரிக்கவும், ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவும் வங்கிகள் இந்த முறையை பின்பற்றுகின்றன.

35
நிபந்தனை இல்லாத வங்கிகள்

சில அரசு வங்கிகள் வாடிக்கையாளர் நலனுக்காக குறைந்தபட்ச இருப்புத் தொகை நிபந்தனையை நீக்கியுள்ளன. அதில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI), பஞ்சாப் நேஷனல் பாங்க் (PNB) மற்றும் இந்தியன் பாங்க் ஆகியவை அடங்கும். ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்வோத்ரா கூறியதாவது, “குறைந்தபட்ச இருப்புத் தொகை குறித்து ரிசர்வ் வங்கி எந்தக் கட்டுப்பாடும் விதிக்கவில்லை. சில வங்கிகள் ரூ.10,000, சில ரூ.2,000 என நிர்ணயிக்கின்றன; சில வங்கிகள் முழுமையாக விலக்குகின்றன” என்றார்.

45
தனியார் வங்கிகளின் மாற்றங்கள்

சில தனியார் வங்கிகள், குறிப்பாக ஐசிஐசிஐ பாங்க், அருகிலுள்ள குறைந்தபட்ச இருப்புத் தொகையை உயர்த்தியுள்ளது. ஆகஸ்ட் 1 முதல் புதிய சேமிப்பு கணக்குகளுக்கு மாத சராசரி இருப்புத் தொகை ரூ.10,000 முதல் ரூ.50,000 ஆக ஐமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.

55
ஜீரோ பாலன்ஸ் சேமிப்பு கணக்கு

சேமிப்பு கணக்கு திறப்பதற்கு முன், குறைந்தபட்ச இருப்புத் தொகை நிபந்தனை மற்றும் அதைக் கடைபிடிக்காததால் ஏற்படும் அபராதத்தை நன்கு தெரிந்து கொள்வது அவசியம். அரசு வங்கிகளில் இந்நிபந்தனை விலக்கு கிடைத்தாலும், தனியார் வங்கிகளில் அதிக இருப்புத் தொகை தேவைப்படலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories