gold rate in chennai
தங்கத்தில் அதிகரிக்கும் முதலீடு
தங்கத்தில் முதலீடு செய்தால் எப்போதும் நஷ்டம் ஏற்படாது. அந்த அளவிற்கு லாபத்தை மட்டுமே கொடுக்கும் தங்கத்தை வாங்க மக்கள் போட்டி போடுகிறார்கள். இதன் காரணமாகவே தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. கடந்த தீபாவளி தினத்தில் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டது. அதன் படி ஒரு சவரன் 59ஆயிரத்து 640 ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியது.
gold rate
உச்சத்தை தொட்ட தங்கம் விலை
இதனால் அடுத்த ஒரு வருட்த்திலையே தங்கத்தின் விலை ஒரு சவரன் ஒரு லட்சம் என தொடும் என கணிக்கப்பட்டது. ஆனால் அனைத்து கணிப்பையும் பொய்யாக்கி 4ஆயிரம் ரூபாய் அளவிற்கு தங்கத்தின் விலை குறைந்தது. இது தான் நல்ல சான்ஸ் என தங்கத்தை மக்கள் வாங்கி வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் திருமண நிகழ்வுகள், விஷேச நாட்களில் தங்கம் வாங்குவது இந்தியாவில் வாடிக்கையாக உள்ளது.
gold rate
பண்டிகை நாட்கள்- அதிகரிக்க காத்திருக்கும் தங்கம்
அந்த வகையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகை வரவுள்ள நிலையில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தங்கத்தின் விலையானது கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை சரிவை சந்தித்தது. இதனால் சந்தோஷத்தில் துள்ளிக்குதித்த மக்களுக்கு அடுத்த நாளே அதிர்ச்சி கொடுத்தது.
Gold rate
நேற்றைய விலை என்ன.?
கடந்த சனிக்கிழமை கிராம் ஒன்றுக்கு 60 ரூபாய் அதிகரித்து 7100 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 480 ரூபாய் உயர்ந்து 56ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று தங்க வர்த்தக சந்தை விடுமுறை காரணமாக தங்கத்தின் விலையில் எந்தவித மாற்றம் இல்லை.
gold rate today
இன்றைய தங்கம் விலை
இன்று வாரத்தின் முதல் நாள் மற்றும் விஷேச நாட்கள் காரணமாக தங்கத்தின் விலை அதிகரிக்கும் என கணிக்கப்பட்டது. ஆனால் நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் மாற்றமில்லாமல் இன்றைய தங்க வர்த்தகம் துவங்கியுள்ளது. கடந்த சனிக்கிழமையன்று விற்பனையான ஒரு கிராம் 7100 ரூபாய், சவரனுக்கு 56ஆயிரத்து 800 ரூபாய் என்ற விலையில் இன்றும் விற்பனை செய்யப்படுகிறது.