
PPF கணக்கீடுகள்: பொது வருங்கால வைப்பு நிதி (PPF) என்பது ஓய்வூதிய கார்பஸை உருவாக்க மக்கள் அடிக்கடி பயன்படுத்தும் திட்டமாகும். முதலீட்டாளர்கள் குறைந்தபட்சம் 500 ரூபாய் முதலீட்டில் தபால் அலுவலகம் அல்லது வங்கியில் PPF கணக்கைத் திறக்கலாம்.
இந்தத் திட்டம் முதலீட்டாளர்கள் ஒரு நிதியாண்டில் வரம்பற்ற வைப்புகளைச் செய்ய அனுமதிக்கிறது. அவர்கள் ஒவ்வொரு நிதியாண்டிலும் குறைந்தபட்சம் 500 ரூபாய் வைப்புடன் கணக்கை பராமரிக்க வேண்டும். இத்திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள் ஆகும். கணக்கு வைத்திருப்பவர் முதிர்வுக்குப் பிறகு டெபாசிட்டுகளுடன் அல்லது இல்லாமலும் தங்கள் கணக்கைத் தொடரலாம்.
PPF வைப்புத்தொகையிலிருந்து உருவாக்கப்படும் கார்பஸ் வட்டித் தொகையிலிருந்து வழக்கமான வரியில்லா வருமானத்தைப் பெறப் பயன்படுத்தப்படலாம். பிபிஎஃப்-ல் ஒரு நிதியாண்டில் ரூ.1.50 லட்சம் வரையிலான டெபாசிட்டுகளுக்கும் வரி இல்லை. PPF திரும்பப் பெறுவதன் மூலம் ஒருவர் மாதம் ரூ.72,000 வருமானம் பெறலாம்.
ஓய்வூதியத் திட்டத்தில், முதலீட்டாளர் தங்கள் போர்ட்ஃபோலியோவை சந்தையுடன் இணைக்கப்பட்ட மற்றும் சந்தை அல்லாத முதலீட்டு விருப்பங்களுடன் பல்வகைப்படுத்தலாம். PPF நிலையான வட்டி விகிதத்தை வழங்குவதால், முதலீட்டாளர்கள் தங்கள் போர்ட்ஃபோலியோவின் கடன் பகுதியை உருவாக்க அதைப் பயன்படுத்தலாம்.
PPF கணக்கு 15 ஆண்டுகளில் முதிர்ச்சியடைகிறது, ஆனால் முதலீட்டாளர்கள் அதன் பிறகு ஒவ்வொன்றும் 5 ஆண்டுகள் நீட்டிக்க முடியும். ஒரு நிதியாண்டில் குறைந்தபட்ச முதலீடு ரூ.500, அதிகபட்சம் ரூ.1.50 லட்சம். தபால் அலுவலகம் மற்றும் வங்கிகளில் பிபிஎஃப் கணக்கிற்கான வட்டி விகிதம் 7.1 சதவீதம்.
ஒரு PPF கணக்கு வைத்திருப்பவர் கணக்கு தொடங்கிய ஆண்டைத் தவிர்த்து, 5 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நிதியாண்டில் ஒரு முறை வட்டித் தொகையைத் திரும்பப் பெற அனுமதிக்கப்படுவார்கள். (2023-24ல் கணக்கு திறக்கப்பட்டிருந்தால், 2029-30ல் அல்லது அதற்குப் பிறகு பணம் எடுக்கலாம்)
PPF கணக்கு வைத்திருப்பவர்கள் 15 ஆண்டுகள் முதிர்ச்சிக் காலத்துக்குப் பிறகு, தங்கள் கணக்கை டெபாசிட்டுடன் அல்லது டெபாசிட் இல்லாமல் தொடரலாம். தங்கள் கணக்கை 5 ஆண்டுகளுக்கு எத்தனை தடவை வேண்டுமானாலும் நீட்டித்துக்கொள்ளலாம். முதலீட்டுக் காலம் முழுவதும் தங்கள் முதலீட்டுக்கு கூட்டு வட்டியின் பலன் கிடைக்கும்.
PPF கணக்கில் இருந்து மாதம் ரூ.72,000 வருமானம் பெறுவது எப்படி? அதற்கு முதலீட்டாளர்கள் ஒவ்வொரு நிதியாண்டும் ரூ.1.50 லட்சம் முதலீட்டில் தொடங்கி, 15 ஆண்டுகள் முதிர்வு காலம் வரை தொடர்ந்து இதே தொகையை செய்ய வேண்டும். வட்டியின் அதிகபட்ச பலனைப் பெற, ஒவ்வொரு நிதியாண்டிலும் ஏப்ரல் 1-5க்குள் 1.5 லட்சம் ரூபாய் முதலீடு செய்ய வேண்டும்.
15 ஆண்டுகளில் முதலீட்டுத் தொகை ரூ.22,50,000 ஆகவும், வட்டி ரூ.18,18,209 ஆகவும், இருக்கும். இரண்டும் சேர்ந்து முதிர்வுத் தொகை ரூ.40,68,209 வரும். முதலீட்டாளர் இதை 5 ஆண்டுகள் நீட்டிக்க வேண்டும். முன்பு போலவே ஆண்டுக்கு ரூ.1.50 லட்சத்தை தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும்.
20 ஆண்டுகளில், மொத்த முதலீடு ரூ.30,00,000 ஆகவும், வட்டி ரூ.36,58,288 ஆகவும், இருக்கும் கார்பஸ் ரூ.66,58,288 ஆக இருக்கும். இதை இன்னும் 5 ஆண்டுகள் நீட்டித்து, அதே ரூ.1.50 லட்சம் முதலீட்டை ஆண்டுதோறும் டெபாசிட் செய்ய வேண்டும்.
25 ஆண்டுகளில், மொத்த முதலீடு ரூ.37,50,000, வட்டி ரூ.65,58,015 சேர்ந்து கிடைக்கும் கார்பஸ் ரூ.1,03,08,015 ஆக இருக்கும். இன்னும் 5 ஆண்டுகள் கணக்கை நீட்டிக்க வேண்டும். இப்போது 2 ஆண்டுகளுக்கு மட்டும் ஆண்டுக்கு ரூ.1.50 லட்சத்தை முதலீடு செய்யலாம். 27 ஆண்டுகள் கழித்து மொத்த முதலீடு ரூ.40,50,000. வட்டி ரூ.81,06,422. ஆக, மொத்தம் முதிர்வுத்தொகையாக ரூ.1,21,56,422 வரும்.
இப்போது, மொத்த கார்பஸ் மீதான வட்டியைத் திரும்பப் பெற ஆரம்பிக்கலாம். PPF கணக்கு வைத்திருப்பவர் வருடத்திற்கு ஒருமுறை வட்டித் தொகையை எடுக்கலாம். 7.1 சதவீத வட்டி விகிதத்தில், ஒரு வருடத்திற்கான வட்டி ரூ. 8,63,105.962 ஆகும். இதை ஒரு மாதத்திற்குக் கணக்கிட்டால் ரூ.71,926 வரும். அதாவது கிட்டத்தட்ட 72,000 ரூபாய் மாதம்தோறும் வருமானம் கிடைக்கும்.