Public Provident Fund (PPF)
பொது வருங்கால வைப்பு நிதி (PPF) என்பது இந்தியாவில் முதலீடு செய்வதற்கான முக்கிய வழிமுறையாகும். அதிக வட்டி, வரி சேமிப்பு, பணத்துக்குக் கிடைக்கும் பாதுகாப்பு ஆகிய காரணங்களால் இந்த திட்டத்தில் நிறைய பணம் முதலீடு செய்யப்படுகிறது. எந்தவொரு இந்திய குடிமகனும் PPF இல் ஆண்டுக்கு 500 ரூபாய் முதல் முதலீடு செய்யலாம். ஒரு நிதியாண்டில் ரூ.1.5 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம்.
PPF account
பிபிஎஃப் கணக்கில் முதலீடு செய்தால் பிரிவு 80C இன் கீழ் வரி விலக்கு கிடைக்கும். வட்டி வருமானம் மற்றும் முதிர்வுத் தொகைக்கும் வரி செலுத்தவேண்டியதில்லை. ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் ரூ.500 டெபாசிட் செய்யப்படாவிட்டால், பிபிஎஃப் கணக்கு (PPF Account) செயலிழந்துவிடும்.
Closed PPF account
PPF கணக்கு செயலிழந்தால், கடன் வசதியும் கிடைக்காது. அதுவரை முதலீடு செய்திருக்கும் பணத்தை பகுதியளவு திரும்பப் பெறுவதும் நிறுத்தப்படும். ஆனால், PPF கணக்கு மூடப்பட்டுவிட்டால், அச்சப்படத் தேவையில்லை. அதை எளிதாக மீண்டும் ஆக்டிவேட் செய்யலாம்.
Activate PPF account
PPF கணக்கு என்பது பாதுகாப்பான முதலீட்டுக்கான வழிமுறை மட்டுமல்ல, வரிச் சேமிப்பு மற்றும் அதிக வட்டி விகிதமும் தருகிறது. எனவே, உங்கள் PPF கணக்கு செயலிழக்காமல் இருப்பதை உறுதிசெய்துகொள்ளவும். இதற்கு ஒவ்வொரு வருடமும் குறைந்தபட்ச தொகையை அதில் டெபாசிட் செய்தால் போதும்.
PPF investment
உங்கள் PPF கணக்கு திறக்கப்பட்டுள்ள வங்கி அல்லது தபால் நிலையத்திற்குச் செல்லவும். செயலிழந்த PF கணக்கை மீண்டும் செயல்படுத்த, ஒரு படிவத்தை நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும். நீங்கள் பணத்தை டெபாசிட் செய்யாத ஆண்டுகளுக்கு உரிய நிலுவைத் தொகையையும் செலுத்த வேண்டும். டெபாசிட் செய்யத் தவறிய ஒவ்வொரு நிதியாண்டுக்கும் ரூ.50 அபராதம் செலுத்த வேண்டும்.
PPF deposit delay
உதாரணமாக, உங்கள் PPF கணக்கு 4 வருடங்கள் செயல்படாமல் இருந்தால், நீங்கள் 4 ஆண்டுகளுக்கு ரூ. 2000 (ஆண்டுக்கு ரூ.500) டெபாசிட் செய்ய வேண்டும். மேலும், நான்கு ஆண்டுகளுக்கு ரூ.200 (ஆண்டுக்கு ரூ.50) அபராதமும் செலுத்த வேண்டும்.
PPF account rules
2016ஆம் ஆண்டில் இருந்து, சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு, முதிர்வு காலத்திற்கு முன்பே கணக்கை மூடுவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. உயிருக்கு ஆபத்தான நோய் அல்லது குழந்தையின் கல்விச் செலவுகள் போன்ற சில சூழ்நிலைகளில் கணக்கை முன்கூட்டியே மூடலாம். ஆனால், இந்த வசதி PF கணக்கில் 5 ஆண்டுகள் முதலீடு செய்த பிறகுதான் கிடைக்கும்.