ஒரு கிலோ 50 ரூபாய்! இந்திய மாட்டு சாணத்தைப் விரும்பி வாங்கும் நாடுகள்!

First Published | Dec 22, 2024, 6:04 PM IST

பசுவின் சாணம் பல பயன்பாடுகளைக் கொண்டுள்ளது. இந்தியாவில் இது மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது. உலகமும் பசுவின் சாணத்தின் நன்மைகளைப் புரிந்துகொண்டுள்ளதால், இந்தியாவில் இருந்து அதன் ஏற்றுமதி அதிகரித்து வருகிறது. நல்ல விலையும் கிடைத்து வருகிறது.

Cow dung export

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளில் மாட்டு சாணம் ஏற்றுமதி வேகமாக அதிகரித்துள்ளது. பல நாடுகளுக்கு இந்திய மாட்டு சாணம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த நாடுகள் பசுவின் சாணத்தை பல வழிகளில் பயன்படுத்துகின்றன. இந்த நாடுகளில் குவைத் மற்றும் அரபு நாடுகள் அடங்கும்.

இந்தியாவில் இருந்து வரும் மாட்டு சாணத்தை அரபு நாடுகள் எப்படி பயன்படுத்துகின்றன. எவ்வளவு விலை கொடுத்து வாங்குகிறார்கள் என்று தெரிந்துகொள்ளலாம்.

Cow dung use

பசுவின் சாணத்தை தூள் வடிவில் பயன்படுத்துவதால், பேரீச்சம்பழம் பெருகும் என்பதை இந்த நாடுகளின் வேளாண் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து கண்டுபிடித்துள்ளனர்.

பேரீச்சம்பழத்தில் மாட்டுச் சாணப் பொடியைப் பயன்படுத்துவதால், பழங்களின் அளவு அதிகரித்து, உற்பத்தியும் கணிசமாக அதிகரித்துள்ளது.

Tap to resize

Cow dung benefits

பேரீச்சம்பழங்களின் உற்பத்தியை அதிகரிக்க, குவைத் உள்ளிட்ட அரபு நாடுகள் இந்தியாவில் இருந்து மாட்டு சாணத்தை அதிக அளவில் இறக்குமதி செய்கின்றன.

எண்ணெய் மற்றும் எரிவாயு வளம் கொண்ட அரபு நாடுகள் பேரீச்சம்பழ உற்பத்தியை அதிகரிக்க மாட்டு சாணத்தை பயன்படுத்துகின்றன. அண்மையில், குவைத் 192 மெட்ரிக் டன் மாட்டு சாணத்தை இந்தியாவில் இருந்து பெற ஆர்டர் செய்தது.

Cow dung import

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் மாட்டுச் சாணத்தின் விலையைக் கொண்டே மாட்டுச் சாணத்தின் தேவையையும் அதன் பலனையும் மதிப்பிடலாம். தற்போது, ​​ஒரு கிலோ, ரூ.30 முதல், ரூ.50 விலையில் மாட்டு சாணம் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

Cow dung from India

விவசாயத்தை முக்கியத் தொழிலாகக் கொண்ட இந்தியாவில் கால்நடைகளின் எண்ணிக்கையும் மிக அதிகம். இந்தியாவில் சுமார் 30 கோடி கால்நடைகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இவற்றின் மூலம் தினமும் சுமார் 30 லட்சம் டன் மாட்டு சாணம் கிடைக்கிறது.

Cow dung usage in India

இந்தியாவிலேயே மாட்டு சாணம் பலவிதமாகப் பயன்படுகிறது. விவசாயத்தில் உரமாக இடப்படுகிறது. எரிபொருளாக பயன்படுவது மட்டுமின்றி, இயற்கை எரிவாயு தயாரிக்கவும் மாட்டுச் சாணம் பயன்படுகிறது. சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்காத பல பொருள்களைத் தயாரிக்க மாட்டுச்சாணம் பயன்படுத்தப்படுகிறது.

Latest Videos

click me!