gold rate today
தங்கத்தின் மீதான முதலீடு
தங்கத்தின் மீதான ஈர்ப்பு இந்திய மக்களிடம் அதிகமாகவே உள்ளது. இதன் காரணமாக தங்கத்தின் விலை அதிகரித்தாலும் குறைந்தாலும் நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக தங்கத் ஒரு சிறந்த முதலீடாக மக்கள் பார்க்கிறார்கள். கார் உள்ளிட்ட ஆடம்பர பொருட்கள் வாங்கும்போது பல லட்சம் செலவு செய்ய வேண்டிய நிலை இருக்கும். அதன் மதிப்பு நாளுக்கு நாள் குறையுமே தவிர உயராது. அதே நேரத்தில் தங்கத்தில் முதலீடு செய்வதால் எப்போதும் நஷ்டம் ஏற்படாமல் லாபத்தை மட்டுமே கொடுத்து வருகிறது.
today gold rate
உயர்ந்து வரும் தங்கம் விலை
அந்த வகையில் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ஆயிரம் ரூபாய் வரை அதிகரித்துள்ளது. எனவே தங்கத்தை வாங்க மக்கள் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள். மேலும் திருமண, விஷேச நாட்களில் நகைகளை மக்கள் அதிகளவு வாங்கி வருகிறார்கள். தங்கமானது அத்தியாவசிய தேவைக்கு பெரிய அளவில் உதவியாக உள்ளது. குறிப்பாக அவசர கால மருத்துவ சிகிச்சை போன்ற நேரத்தில் தங்கத்தை உடனடியாக விற்கவோ, அடமானம் வைக்கவோ முடிகிறது.
Gold price chennai
இமாலய உச்சத்தை தொட்ட விலை
எனவே கைவசம் தங்க நகைகள் இருந்தால் நடுத்தரவர்க்க மக்களுக்கு ஆபத்து கால நண்பனாக தங்கம் உள்ளது. இந்த நிலையில் தான் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏறி இறங்கி வருகிறது. கடந்த அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி தினத்தில் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டது. அதன் படி ஒரு சவரன் 59,640 ரூபாய் என்ற இமாலய இலக்கை எட்டியது. இதனால் தங்கத்தை இனி வாங்க முடியாதோ என மக்கள் அச்சப்பட்ட நிலையில் திடீரென தங்கம் விலை சரிய தொடங்கியது.
today gold rate in chennai
ஏறி இறங்கும் தங்கம் விலை
இதனால் 60ஆயிரம் ரூபாய் என்ற உச்சத்தில் இருந்து 55ஆயிரம் முதல் 56ஆயிரம் வரை விற்பனையானது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தங்கத்தின் விலை 1200 ரூபாய் வரை குறைந்திருந்தது. இந்தநிலையில் நேற்று நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் தங்கத்தின் விலை உயர்ந்தது. இதன் படி கிராம் ஒன்றுக்கு 60 ரூபாய் அதிகரித்து 7100 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 480 ரூபாய் அதிகரித்து 56ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
gold price today
இன்றைய தங்கம் விலை
இன்று தங்க வர்த்தக சந்தை விடுமுறை காரணமாக தங்கத்தின் விலையில் எந்தவித மாற்றமின்றி நேற்றைய விலையான ஒரு சவரன் 56,800 ரூபாய்க்கு விற்பனையாகிறது. நாளை வாரத்தின் முதல் நாள் தங்கத்தின் விலை ஏறுமா.? இறங்குமா என மக்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்