தொடர்ந்து சரியும் தங்கம் விலை.! ரூ.80,000-க்கு கீழ் குறையுமா? நிபுணர்கள் கூறுவது என்ன.?

Published : Mar 19, 2026, 04:46 PM IST

Thangam Vilai Kuraiya Vaippu Ullatha : கடந்த சில மாதங்களாக உச்சத்தில் இருந்த தங்கம் விலை படிப்படியாக குறையத் தொடங்கியிருக்கிறது. இது மேலும் எவ்வளவு குறைய வாய்ப்பு இருக்கிறது என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

PREV
17
Thangam Vilai Kuraiya Vaippu Ullatha

ஏழை, நடுத்தர மக்கள் தொடங்கி வசதி படைத்தவர்கள் பலரும் தங்கத்தை ஒரு சிறந்த முதலீடாக கருதுகின்றனர். தங்கம் விலை கடந்த சில மாதங்களாக உச்சத்தை அடைந்திருந்த நிலையில் தற்போது தொடர் சரிவை சந்தித்து வருகிறது. இது பொதுமக்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் மாற்றங்கள் மற்றும் பொருளாதார காரணிகளால் இந்த விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

27
தொடர் சரிவில் தங்கம் விலை

மார்ச் 19, 2026 நிலவரப்படி ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.2,360 குறைந்து ரூ.1,24,800-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.10,000 குறைந்து ரூ.2,65,000-க்கு விற்பனையாகிறது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து தங்கம், வெள்ளி விலையில் மாற்றம் ஏற்பட்டு வரும் நிலையில் இது மேலும் எவ்வளவு குறைய வாய்ப்பு இருக்கிறது என நிபுணர்கள் கணித்துள்ளனர். அப்படி குறைந்தால் எவ்வளவு குறையும் என்று இப்போது பார்க்கலாம்.

37
தங்கம் விலை வீழ்ச்சிக்கான காரணங்கள்

தங்கம் விலை வீழ்ச்சி அடைய மூன்று முக்கிய காரணங்கள் கூறப்படுகிறது. அமெரிக்காவின் மத்திய வங்கி வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை என அறிவித்தாலும், பண வீக்கத்தை குறைக்க வட்டி விகிதங்களை நீண்ட காலத்திற்கு உயர்வாகவே வைத்திருக்கும் என்கிற எதிர்பார்ப்பு தங்கம் மீதான முதலீட்டை குறைத்துள்ளது. சர்வதேச சந்தையில் டாலரின் மதிப்பு உயர்ந்துள்ளதால் டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு சரிந்துள்ளது. இது தங்கத்தின் தேவையை உலக அளவில் குறைக்கிறது.

47
கச்சா எண்ணெய் பக்கம் திரும்பிய கவனம்

தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தில் இருந்ததால் முதலீட்டாளர்கள் தங்கள் கையிருப்பில் உள்ள தங்கத்தை விற்று லாபம் ஈட்ட தொடங்கி இருக்கின்றனர். இது சந்தையில் தங்கத்தின் புழக்கத்தை அதிகரித்து விலையை இறக்கியுள்ளது. மேலும் கச்சா எண்ணெயின் தேவை அதிகரித்துள்ளதால் முதலீட்டாளர்களின் கவனம் கச்சா எண்ணெய்யை நோக்கி திரும்பி இருப்பதும் தங்கம் விலை குறைவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

57
தங்கம் விலை எவ்வளவு குறைய வாய்ப்புள்ளது?

தங்கம் விலை குறையத் தொடங்கினாலும் நிபுணர்களின் கணிப்புப்படி இது குறுகிய காலத்திற்கு தொடர்ந்து சரிவில் இருக்க வாய்ப்பு உள்ளதாக கூறுகின்றனர். சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 4,750 டாலர் என்கிற நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இது இந்திய சந்தையில் 10 கிராம் தங்கத்தின் விலையை ரூ.1,45,000 முதல் ரூ.1,48,000 என்கிற நிலைக்கு கொண்டு செல்லும். மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றங்கள் மீண்டும் அதிகரித்தால் தங்கம் விலை மீண்டும் மின்னல் வேகத்தில் உயர வாய்ப்பு உண்டு.

67
ரூ.1 லட்சம் வரை குறையலாம்

நிபுணர்களின் கணிப்புப்படி தங்கம் விலையில் அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டாலும், ஒரு சவரன் ரூ.1 லட்சம் ரூபாய்க்கு கீழ் செல்வதற்கான வாய்ப்பு இல்லை என்று கூறுகின்றனர். தங்க விலை சரிவானது இன்னும் சில நாட்களுக்கு தொடரலாம். இருப்பினும் ஒரு பெரிய வீழ்ச்சி ஏற்பட்டு ஒரு சவரன் ஒரு லட்சத்திற்கும் கீழே குறைவதற்கான வாய்ப்பு உள்ளது. போர் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்ற காரணங்களால் தங்கத்தின் விலை தற்காலிக சரிவைக் கண்டிருந்தாலும் நீண்ட கால அடிப்படையில் விலை மீண்டும் உயர்வதற்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளது.

77
SIP போன்ற திட்டங்களில் முதலீடு செய்யலாம்

தங்கம் விலையில் ஏற்ற இறக்கங்கள் இருப்பதால் மொத்தமாக முதலீடு செய்வதை தவிர்த்து, SIP போன்ற முறையில் சிறுக சிறுக முதலீடு செய்வது பாதுகாப்பானது. தங்கத்தை பொறுத்தவரை குறுகிய கால லாபத்தை எதிர்பார்க்கக் கூடாது. நீண்டகால சேமிப்பாக தங்க முதலீட்டை தேர்ந்தெடுப்பது நல்ல லாபத்தைக் கொடுக்கும். திருமணம் உள்ளிட்ட சுப செலவுகளுக்கு தங்கம் வாங்க நினைப்பவர்களுக்கு இது நல்ல நேரமாகும். தங்கம் குறையும் நேரத்தில் வாங்கி வைத்துக் கொள்வது புத்திசாலித்தனமான முடிவாகும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories