டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க்கிற்கு 1 டிரில்லியன் டாலர் மதிப்பிலான பெரும் சம்பளத் திட்டம் ஒப்புதலுக்கு வந்துள்ளது. இதன் இந்திய மதிப்பு எவ்வளவு? எலான் மஸ்க்கிற்கு ஏன் இவ்வளவு சம்பளம் வழங்கப்படுகிறது? என்பதை பார்க்கலாம்.
டெஸ்லா நிறுவனத்தின் ஆண்டு பொதுக்கூட்டத்தில், தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க்கிற்கு 1 டிரில்லியன் டாலர் (சுமார் ரூ.88 லட்சம் கோடி) மதிப்பிலான பெரும் சம்பளத் திட்டம் ஒப்புதலுக்கு வந்துள்ளது. இந்த திட்டத்திற்கு பங்குதாரர்களில் 75 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் ரோபோடிக்ஸ் வளர்ச்சியைத் தொடர மஸ்க் டெஸ்லாவுடன் நீண்டகாலம் இருப்பதை உறுதி செய்வதற்காகவே இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
24
எலான் மஸ்க்
எலான் மஸ்க், இதற்கான வாக்கெடுப்பு முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது மகிழ்ச்சியுடன், “என்னை ஆதரித்த அனைவருக்கும் இதயபூர்வ நன்றி. நான் இதை மிகுந்த மதிப்புடன் ஏற்கிறேன்,” என்று தெரிவித்தார். இந்த ஒப்புதல், டெஸ்லா பங்குதாரர்கள் மஸ்க்கின் தலைமையில் இன்னும் நம்பிக்கை வைத்திருப்பதைக் காட்டுகிறது. திட்டத்தின் படி, மஸ்க் குறைந்தது 7.5 ஆண்டுகள் டெஸ்லாவில் தொடர வேண்டும். இதனால், டெஸ்லாவில் அவரது பங்குச் சதவீதம் 12% இலிருந்து 25% வரை உயரும் வாய்ப்பு உள்ளது.
34
ரோபோடிக்ஸ் வளர்ச்சி
டெஸ்லா குழுமத் தலைவர் ராபின் டென்ஹோம், “மஸ்க் டெஸ்லாவில் தொடர்வது நிறுவனத்தின் எதிர்காலத்துக்கு அவசியம். அவர் வெளியேறினால் பங்கின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடையும்,” என்று வலியுறுத்தினார். எனினும், சில விமர்சகர்கள், “விற்பனை குறைந்து கொண்டிருக்கிறது, ஆனால் மஸ்க்கிற்கு இவ்வளவு பெரிய தொகை வழங்கப்படுவது நியாயமில்லை,” என கருத்து தெரிவித்துள்ளனர். அதே சமயம், வால்ஸ்ட்ரீட் பகுப்பாய்வாளர்கள் இதை “AI புரட்சியின் முக்கிய அங்கீகாரம்” என்று வரவேற்றுள்ளனர்.
மஸ்க்கிற்கு முழு தொகை கிடைக்க 12 முக்கிய இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அதில் முதல் இலக்கு – டெஸ்லாவின் மார்க்கெட் மதிப்பு $2 டிரில்லியன் அடைவது. தற்போது அது சுமார் $1.5 டிரில்லியன் ஆக உள்ளது. மஸ்க் ஏற்கனவே உலகின் மிகப்பெரிய பணக்காரர் (ரூ.41 லட்சம் கோடி நிகர மதிப்புடன்) ஆகும் நிலையில், இந்த புதிய சம்பள ஒப்புதல் அவர் மீது டெஸ்லா பங்குதாரர்கள் கொண்டிருக்கும் வலுவான நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.