இந்தியாவில் 2025ம் ஆண்டு ரூ.2,708 கோடி நன்கொடையை வாரி வழங்கி ஷிவ் நாடார் முதலிடம் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் அம்பானி, அதானி எந்த இடத்தில் உள்ளனர்? என்பது குறித்து பார்க்கலாம்.
HCL டெக்னாலஜிஸ் நிறுவனர் தமிழகத்தை சேர்ந்த ஷிவ் நாடார் நன்கொடைகளை வாரி வழங்குவதில் இந்தியாவிலேயே முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். இவர் ஷிவ் நாடார் ஃபவுண்டேஷன் மூலம் கல்வி மற்றும் கலைகளுக்கு இந்த ஆண்டு மட்டும் ரூ.2,708 கோடியை வாரி வழங்கியுள்ளார். இது கடந்த ஆண்டை விட 26% அதிகமாகும்.
24
வாரி வழங்கியதில் ஷிவ் நாடார் நம்பர் 1
கடந்த 5 ஆண்டுகளில் 4 முறை ஷிவ் நாடார் அதிகமாக நன்கொடைகளை அளிப்பவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் என்று EdelGive Hurun India Philanthropy List 2025 அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஷிவ் நாடாரை தொடர்ந்து முகேஷ் அம்பானி ரூ.626 கோடி நன்கொடையை அள்ளிக்கொடுத்து 2வது இடத்தில் உள்ளார். அம்பானி ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் மூலம் கல்வி, சுகாதாரம் மற்றும் பெண்களுக்கு அதிக நிதியை வழங்கியுள்ளார்.
34
அதானி 5வது இடம்
3வது இடத்தில் உள்ள பஜாஜ் குடும்பம் ரூ.446 கோடி நன்கொடைகளை அளித்துள்ளது. 4வது இடத்தில் குமார் மங்கலம் பிர்லா & குடும்பத்தினர் ரூ.440 கோடியும், 5வது இடத்தில் கௌதம் அதானி குடும்பம் ரூ.386 கோடியும் நன்கொடையாக வழங்கியுள்ளனர். இதேபோல் நந்தன் நிலேகனி ரூ.365 கோடி நன்கொடைகளுடன் 6வது இடத்திலும், இந்துஜா குடும்பம் ரூ.298 கோடிகளுடன் 7வது இடத்திலும், ரோஹிணி நிலேகனி ரூ.204 கோடிகளுடன் 8வது இடத்திலும் உள்ளனர்.
மேலும் சுதிர் மற்றும் சமீர் மேத்தா ரூ.189 கோடிகளுடன் 9வது இடத்திலும், சைரஸ் மற்றும் அதார் பூனாவாலா ரூ.173 கோடிகளுடன் 10வது இடத்திலும் உள்ளனர். மேற்கண்ட இந்த 10 நன்கொடையாளர்கள் ரூ.5,834 கோடி நன்கொடையை வழங்கியுள்ளனர்.
இது கடந்த ஆண்டை விட 26% அதிகமாகும். மேற்கண்ட 10 பேரையும் சேர்த்து ஒட்டுமொத்தத்தில் தாராள மனப்பான்மை கொண்டவர்கள் இந்தியாவில் ரூ.10,380 கோடியை வாரி வழங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்துஜா குடும்பம், சுதிர் மற்றும் சமீர் மேத்தா மற்றும் சைரஸ் மற்றும் அதார் பூனாவாலா ஆகியோர் நன்கொடையை அதிகமாக வழங்கிய டாப் 10 பட்டியலில் இந்த ஆண்டு இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.