கிரெடிட் கார்டு தாமதக் கட்டணம்: உச்ச நீதிமன்றம் அளித்த அதிரடி தீர்ப்பு!

Published : Dec 24, 2024, 07:46 PM ISTUpdated : Dec 24, 2024, 08:07 PM IST

Credit Card Penalty Fee: தேசிய நுகர்வோர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்குத் தடை விதித்த உச்ச நீதிமன்றம், கிரெடிட் கார்டு பில் தாமதமாகச் செலுத்துபவர்களிடமிருந்து 30 சதவீதத்துக்கும் அதிகமான வருடாந்திர வட்டியை வசூலிக்க அனுமதி அளித்துள்ளது.

PREV
17
கிரெடிட் கார்டு தாமதக் கட்டணம்: உச்ச நீதிமன்றம் அளித்த அதிரடி தீர்ப்பு!
Credit Card Penalty

கிரெடிட் கார்டுகள் பொதுவாக பில்களைச் செலுத்துவது போன்ற தேவைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன. எதையாவது வாங்கும்போது பணத் தட்டுப்பாடு ஏற்பட்டாலும், கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்துகிறார்கள். இருப்பினும், சரியான நேரத்தில் பணத்தைத் திரும்பிச் செலுத்துவது முக்கியம். இல்லையெனில் வங்கிக்கு அதிக வட்டியுடன் திருப்பிச் செலுத்த வேண்டிய நிலை வரும். கிரெடிட் கார்டு தொகையைச் செலுத்தத் தவறினால் அதிக வட்டி வசூலிக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

27
Credit Card Users

கிரெடிட் கார்டு பில் சரியான நேரத்தில் செலுத்தப்படாவிட்டால், வங்கிகள் அதிக வட்டி வசூலிக்கின்றன. இந்த விவகாரம் தேசிய நுகர்வோர் நீதிமன்றத்திற்குச் (NCDRC) சென்றபோது, ​​​​கிரெடிட் கார்டுகளுக்கான வட்டி விகிதம் 30 சதவீதத்துக்குள் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

37
Supreme Court on Credit Card Penalty Fee

இப்போது உச்சநீதிமன்றம் தேசிய நுகர்வோர் மன்றத்தின் இந்த முடிவுக்கு தடை விதித்துள்ளது. கிரெடிட் கார்டு தொகையைத் திரும்பச் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டால், அதிக வட்டி வசூலிக்க வங்கிகளை அனுமதித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் வங்கிகளுக்கு லாபம் கூடும். ஆனால், கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துபவர்களுக்கு நெருக்கடியாக இருக்கும். அவர்கள் கிரெடிட் கார்டு பில்களை சரியான நேரத்தில் செலுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

47
Credit Card Rules

உச்ச நீதிமன்றத்தின் இந்த முடிவின் மூலம், தாமதமாக கிரெடிட் கார்டு பில் செலுத்தினால் வங்கிகள் தங்கள் விருப்பம் போல அதிக வட்டியைக் கறக்கலாம். கிரெடிட் கார்டு பயனர்களுக்கு வங்கிகள் இஷ்டம்போல அபராதம் விதிக்க முடியும். கிரெடிட் கார்டுக்கு தாமதமாக பில் செலுத்துவதற்கு 49 சதவீதம் வரை வட்டி வசூல் செய்யலாம்.

57
Credit Cards

எச்எஸ்பிசி, ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் மற்றும் சிட்டி வங்கி உள்ளிட்ட பல வங்கிகளின் மேல்முறையீட்டிற்குப் பிறகு உச்ச நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. வட்டி விகிதம் 30 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்தப்பட்டால், பில்களைச் செலுத்தாத சூழ்நிலையை திறம்பட சமாளிக்க உதவாது என்று வங்கிகள் கூறுகின்றன.

67
Credit Card Fee

உச்ச நீதிமன்றத்தின் இந்த முடிவு கிரெடிட் கார்டு பயனர்களின் பிரச்சினைகளை அதிகரித்துள்ளது, ஏனெனில் இப்போது ஒவ்வொரு வங்கியும் தங்கள் இஷ்டம் போல தாமதக் கட்டணம் வசூலிக்கும். இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஒருவரின் கிரெடிட் ஸ்கோர் ஏற்கனவே மோசமாக இருந்தால், அவர் அதிக அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். அதேசமயம் வழக்கமாக சரியான நேரத்தில் பில் செலுத்துபவர்கள் சிறந்த திட்டத்திற்காக வங்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம்.

77
Credit Card Fine

வங்கிகளுக்கு அதிக அபராதம் செலுத்துவதைத் தவிர்க்க விரும்பினால், சரியான நேரத்தில் பில் செலுத்துவதுதான் ஒரே வழி. கிரெடிட் கார்டு நிலை பில்களைத் தொடர்ந்து கவனித்துக்கொள்ளுங்கள். வங்கி அபராத விகிதத்தில் ஏதேனும் மாற்றத்தை செய்துள்ளதா என்பதைக் கண்காணிப்பது நல்லது. அதிக வட்டியைத் தவிர்க்க, நிலுவைத் தொகையை சரியான நேரத்தில் செலுத்தினால் போதும். இதன் மூலம் கிரெடிட் ஸ்கோரையும் நல்ல நிலையில் பராமரிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories