Physical Gold Vs Gold ETFs
முதலீட்டாளர்கள் தங்களுடைய நிதியை தங்கத்தில் முதலீடு செய்ய பல வாய்ப்புகள் உள்ளன. வழக்கமாக, பலரும் வாங்கும் தங்க நகைகள், நாணயங்கள் தவிர தங்கப் பத்திரங்கள் (SGBs), தங்க ஈடிஎஃப்கள் (ETFs), தங்க நிதிகள், டிஜிட்டல் தங்கம் என பல வாய்ப்புகள் உள்ளன.
Gold or Gold ETF
தங்கப் ETF முதலீடு பங்குச் சந்தையுடன் தொடர்புடையது. சந்தை விலையில் தொடர்ந்து வாங்கவும் விற்கவும் முடியும். தங்க ETF தற்போதைய தங்கத்தின் விலையுடன் நேரடித் தொடர்பு கொண்டது. தங்க கட்டியில் முதலீடு செய்யப்படுகிறது.
Gold ETF vs Gold Return Comparison
தங்க ETF ஃபண்டுகள் 99.5% தூய்மையான தங்கக் கட்டியில் முதலீடு செய்யப்படுகின்றன. எனவே, நீங்கள் தங்கத்தில் முதலீடு செய்ய விரும்பினால், கோல்டு ETF நிதிகள் சிறந்த தேர்வாக இருக்கும் என நிபுணர்கள் பரிந்துரை செய்கிறார்கள். தங்க ETF முதலீட்டுக் கிடைக்கும் லாபத்தை தங்க நகைகள், நாணயங்கள் போன்ற பொருள்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
Gold investment return in 5 years
5 ஆண்டுகளில் தங்க முதலீடு லாபம்
கடந்த 5 ஆண்டுகளில் தங்கத்தின் விலை கணிசமான அளவு உயர்ந்துள்ளது. டிசம்பர் 24, 2019 அன்று 1 கிராமுக்கு ரூ.3,150 ஆக உயர்ந்து, டிசம்பர் 24, 2024 அன்று ரூ.7,850 ஆக உயர்ந்துள்ளது. தோராயமாக இதன் சிஏஜிஆர் (CAGR) மதிப்பு 20%.
Gold investment return in 10 years
10 ஆண்டுகளில் தங்க முதலீட்டு லாபம்
டிசம்பர் 24, 2014 அன்று தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.2,557 ஆக இருந்தது. டிசம்பர் 24, 2024 நிலவரப்படி, ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.7,850 ஆக உயர்ந்துள்ளது. தோராயமாக இதன் சிஏஜிஆர் (CAGR) மதிப்பு 12%.
Gold investment return in 15 years
15 ஆண்டுகளில் தங்க முதலீடு லாபம்
டிசம்பர் 24, 2009 அன்று ஒரு கிராம் தூய தங்கத்தின் விலை ரூ.1,650 ஆக இருந்தது. கடந்த 15 ஆண்டுகளில், இதன் விலை கிடுகிடுவென உயர்ந்துவிட்டது. அப்போது வாங்கிய தங்கத்திற்கு இப்போது கிடைக்கும் தோராயமான சிஏஜிஆர் (CAGR) மதிப்பு 11%.
Gold ETFs return in 5 years
தங்க ஈடிஎஃப் நிதிகளின் 5 ஆண்டு வருமானம்
LIC MF Gold ETF, Axis Gold Fund, Invesco India Gold ETF, SBI Gold Fund, Aditya Birla Sun Life Gold ETF ஆகியவை அவற்றின் கடந்த 5 ஆண்டு வருமானத்தின் அடிப்படையில் சிறந்த செயல்திறன் கொண்ட நிதிகளாக உருவெடுத்துள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளில், இந்த ஐந்து தங்க நிதிகள் 13.8% முதல் 14.07% வரை வருமானத்தை அளித்துள்ளன.
Gold ETFs return in 10 years
தங்க ஈடிஎஃப் நிதிகளின் 10 ஆண்டு வருமானம்
10 ஆண்டு வருமானத்தின் அடிப்படையில்,LIC MF Gold ETF, SBI Gold Fund, Kotak Gold Fund, Aditya Birla Sun Life Gold ETF, Invesco India Gold ETF ஆகியவை முதல் 5 ஃபண்டுகளில் இடம்பெற்றுள்ளன. இவற்றின் மூலம் உருவாக்கப்படும் வருமானம் 10.02% முதல் 10.28% வரை இருக்கும்.
Gold ETFs return in 15 years
தங்க ஈடிஎஃப் நிதிகளின் 15 ஆண்டு வருமானம்
UTI Gold Fund, SBI Gold ETF, Kotak Gold ETF, Quantum Gold ETF, Nippon India ETF Gold BeES ஆகியவை கடந்த 15 ஆண்டுகளில் 9.54% முதல் 9.62% வரை வருமானத்தை வழங்கியுள்ளன.