தங்கத்தில் முதலீடு- இந்திய மக்கள் ஆர்வம்
தங்கத்தின் மீதான ஆர்வம் இந்திய மக்களிடம் அதிகமாக உள்ளது. திருமண விழாக்கள், விஷேச நாட்களில் தங்கத்தை அணிவதற்கு விருப்பப்படுவார்கள். இதன் காரணமாக நகைக்கடைகளில் நகைப்பிரியர்களின் கூட்டம் எப்போதும் அலைமோதும்.
அந்த வகையில் தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் ஏறி இறங்கி வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சவரன் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது ஒரு சவரன் 60ஆயிரம் என்ற உச்சத்தை தொடும் நிலையில் உள்ளது.