DA Hike News : அரசு ஊழியர்களுக்கு சூப்பர் நியூஸ்! டிஏ உயர்வு குறித்து முக்கிய தகவல்!

First Published | Nov 8, 2024, 4:15 PM IST

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை மத்திய அரசு ஜனவரி மாதம் மீண்டும் உயர்த்த வாய்ப்புள்ளது. ஆனால், இந்த முறை மத்திய அரசு எவ்வளவு உயர்த்தும் என்பது குறித்த கணக்கீடுகள் தொடங்கியுள்ளன.

DA Hike Update

இந்திய நுகர்வோர் விலை குறியீட்டின் அடிப்படையாகக் கொண்டும், பணவீக்கத்தைப் பொருத்தும் அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது.

DA Hike

ஜூலை முதல் டிசம்பர் வரை அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு எவ்வாறு உயர்கிறதோ அதன்படியே அரசு ஊழியர்களின் அகவிலைப்படியும் உயரும்.

Tap to resize

Central Government

சமீபத்தில் செப்டம்பர் மாதத்திற்கான பணவீக்கக் குறியீடு வெளியிடப்பட்டது. இந்தக் குறியீட்டின் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்த்தப்படலாம்.

Indian Consumer Price Index

அறிக்கையின்படி, 2024 செப்டம்பரில் அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு 0.07 புள்ளிகள் உயர்ந்து 143.3 புள்ளிகளாக உள்ளது.

DA Hike News

ஜூலை மாதத்தில் பணவீக்கக் குறியீடு 142.7 புள்ளிகளாகவும், ஆகஸ்ட் மாதத்தில் 142.6 புள்ளிகளாகவும் இருந்தது.

DA News

இதன்படி, மத்திய அரசின் அகவிலைப்படி 54 சதவீதமாக உயர்த்தப்படலாம். பணவீக்கம் இதே நிலையில் தொடர்ந்தால், அகவிலைப்படி ஒரு சதவீதம் உயரும்.

Eighth Pay Commission

இதுதொடர்பாக மத்திய அரசு வட்டாரங்கள் தரப்பில் கூறுகையில்: மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் 8வது ஊதியக் குழு அமல்படுத்தப்படலாம். இந்த மாதம் பேச்சுவார்த்தைகள் தொடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளன. ஆனாலும் அரசு இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.

Dearness Relief

நவம்பரில் கூட்டு ஆலோசனைக் குழு கூட்டம் நடைபெறும். இந்த குழுவில் மத்திய ஊழியர்கள் மற்றும் அரசின் பிரதிநிதிகள் இடம்பெறுவார்கள். இந்தச் சூழலில், கூட்டத்தில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டால், அடுத்த ஆண்டு பட்ஜெட்டில் எட்டாவது ஊதியக் குழு அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Seventh Pay Commission

ஏழாவது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகள் 2016 ஜனவரி 1 அன்று மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டன. அப்போது மாதாந்திர குறைந்தபட்ச சம்பளம் ரூ.26,000 என பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், ரூ.18,000 மட்டுமே அமல்படுத்தப்பட்டது.

Latest Videos

click me!