சுகன்யா சம்ரிதி யோஜனா (SSY) என்பது பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமண எதிர்காலத்திற்காக அரசு வழங்கும் பாதுகாப்பான சேமிப்பு திட்டம் ஆகும். இத்திட்டத்தை பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
சுகன்யா சம்ரிதி யோஜனா என்பது பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமண தேவைகளை கருத்தில் கொண்டு அரசு கொண்டு வந்த சேமிப்புத் திட்டம். 10 வயதுக்குள் இருக்கும் மகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் இந்த கணக்கை தொடங்கலாம். கணக்கு தொடங்கியது, தொடர்ந்து 15 ஆண்டுகள் வரை ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.250 முதல் அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் வரை பணம் செலுத்த முடியும். இது நீண்டகால சேமிப்பை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது.
24
கணக்கு இருப்பை எப்படி சரிபார்ப்பது?
உங்கள் சுகன்யா கணக்கில் உள்ள தொகையை தெரிந்துகொள்ள பல எளிய வழிகள் உள்ளன. கணக்கு எண் மற்றும் IFSC விவரங்களுடன் உங்கள் வங்கி இணையதளம் அல்லது மொபைல் ஆப்பில் உள்நுழைந்து இருப்பை பார்க்கலாம். இதேபோல், அருகிலுள்ள வங்கிக் கிளை அல்லது தபால் அலுவலகத்திற்குச் சென்று, கணக்கு விவரங்களை வழங்கினால் அதிகாரிகள் இருப்புத் தொகையை தெரிவிப்பார்கள். தபால் அலுவலக இணையதளம் அல்லது அதன் ஆப்பின் மூலமாகவும் இருப்பை சரிபார்க்கும் வசதி உள்ளது.
34
வட்டி, பாதுகாப்பு மற்றும் நன்மைகள்
இந்த திட்டத்திற்கு தற்போது 8.2% வட்டி வழங்கப்படுகிறது. இது பெரும்பாலான வங்கி ஃபிக்சட் டெபாசிட் வட்டியை விட அதிகம். மேலும், இந்த முதலீட்டிற்கு அரசு உத்தரவாதம் இருப்பதால் பாதுகாப்பு அதிகம். மகளுக்கு 18 வயது நிரம்பிய பின், உயர்கல்விக்காக ஒரு பகுதி தொகையை எடுக்க அனுமதி உள்ளது. கணக்கு தொடங்க பிறப்புச் சான்றிதழ், அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று மட்டும் போதும்.
மகளுக்கு 21 வயது ஆனதும் சுகன்யா கணக்கு முதிர்ச்சி அடையும். ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் என்ற அளவில் 15 ஆண்டுகள் முதலீடு செய்தால், மொத்த முதலீடு ரூ.22.5 லட்சம் ஆகும். 21 ஆண்டுகள் முடிவில் சுமார் ரூ.71.82 லட்சம் வரை கிடைக்கும் என கணிக்கப்படுகிறது. இதில் சுமார் ரூ.49 லட்சம் வட்டியாக கிடைக்கும். இந்த முழுத் தொகைக்கும் வரி விலக்கு உள்ளது, இந்த திட்டத்தை நடுத்தர குடும்பங்களுக்கு மிகச் சிறந்த தேர்வாக மாற்றுகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.