தினமும் 2 மணி நேரம் போதும்… லட்சங்கள் சம்பாதிக்க பெண்களுக்கு வாய்ப்பு

Published : Feb 20, 2026, 04:56 PM IST

வீட்டிலிருந்தே வருமானம் ஈட்ட விரும்பும் பெண்களுக்கு தற்போது பல சிறந்த தொழில் வாய்ப்புகள் உருவாகியுள்ளன. பெண்கள் எளிதாக தொடங்கக்கூடிய பிசினஸ் ஐடியாக்கள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

PREV
15
பெண்களுக்கு ஏற்ற பிசினஸ் ஐடியாக்கள்

இன்றைய காலத்தில் வேலைக்குச் செல்வதைவிட சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக வீட்டிலிருந்தே வருமானம் ஈட்ட விரும்பும் பெண்கள் பலர், தங்களின் திறமைகள் மற்றும் பொழுதுபோக்குகளை தொழிலாக மாற்ற முயற்சி செய்கிறார்கள். குறைந்த முதலீட்டில், தினமும் இரண்டு மணி நேரம் செலவிட்டாலே நல்ல லாபம் தரக்கூடிய பல தொழில் வாய்ப்புகள் தற்போது டிரெண்டாக உள்ளன.

25
வீட்டிலிருந்து வருமானம்

வீட்டு உணவு மற்றும் டிபன் சேவை பெண்களுக்கு சிறந்த ஆரம்ப வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. சுமார் ரூ.5,000 முதல் ரூ.20,000 வரை முதலீட்டில் இந்தத் தொழிலைத் தொடங்கலாம். சுவையான, ஆரோக்கியமான உணவுகளை தயாரித்து, சமூக வலைதளங்கள் மூலம் விளம்பரம் செய்யலாம். மேலும், உணவு டெலிவரி செயலிகளுடன் இணைந்து சேவையை விரிவுபடுத்த முடியும்.

35
குறைந்த முதலீடு தொழில்

கைவினைப் பொருட்கள் தயாரிப்பு மற்றொரு நல்ல வாய்ப்பு. அலங்காரப் பொருட்கள், நகைகள், மெழுகுவர்த்தி, சோப்பு, ஓவியம் போன்றவற்றை தயாரித்து விற்பனை செய்யலாம். ரூ.5,000 முதல் ரூ.15,000 வரை முதலீட்டில் தொடங்கக்கூடிய இந்த தொழிலை இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற தளங்கள் மூலம் வளர்த்தெடுக்கலாம்.

45
சிறு தொழில் வாய்ப்பு

ஆன்லைன் டியூஷன் மற்றும் கோச்சிங் சேவைகளுக்கும் அதிக வரவேற்பு உள்ளது. பள்ளி பாடங்கள், இசை, வெளிநாட்டு மொழிகள் அல்லது திறன் மேம்பாட்டு வகுப்புகள் நடத்தலாம். நல்ல இணைய வசதி மற்றும் கணினி இருந்தால் வீட்டிலிருந்தே கற்றுத்தர முடியும். மேலும் விளாகிங், ஃப்ரீலான்ஸ் எழுத்து போன்ற துறைகளிலும் குறைந்த முதலீட்டில் வருமானம் பெறலாம்.

55
அரசு வழங்கும் நிதியுதவிகள்

மேலும், டேகர் மையம், பியூட்டி மற்றும் டெய்லரிங் சேவைகள், ஆன்லைன் ரீசெல்லிங் போன்ற தொழில்களும் நல்ல வருமானம் தரக்கூடியவை. அரசு வழங்கும் முத்ரா யோஜனா, ஸ்டாண்ட் அப் இந்தியா போன்ற திட்டங்களின் மூலம் நிதி உதவி பெறலாம். இந்த வாய்ப்புகளை பயன்படுத்தி பெண்கள் வீட்டிலிருந்தே சுயதொழில் முனைவோராக உருவெடுக்கலாம்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories