Union Budget 2023: மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த தமிழர்கள் யார் யார்?

First Published Jan 31, 2023, 3:21 PM IST

சுதந்திர இந்தியாவில் இதுவரை ஆறு தமிழர்கள் மத்திய நிதி அமைச்சர்களாக இருந்து மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளனர்.

ஆறு தமிழர்கள்

1947ஆம் ஆண்டு இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து விடுதலை அடைந்தது. அதிலிருந்து இன்றுவரை 73 முழுமையான பட்ஜெட்டுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இடைக்கால பட்ஜெட் 14 முறை தாக்கல் செய்யப்பட்டது. 4 முறை சிறப்பு பட்ஜெட்டுகள் தாக்கல் செய்யப்பட்டன.

சுதந்திர இந்தியாவில் இதுவரை ஆறு பேர் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக, முதல் முதலில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தவரும் தமிழர்தான்.

ஆர். கே. சண்முகம் செட்டியார்

1947ஆம் ஆண்டு இந்திய சுதந்திரத்துக்குப் பின் முதல் மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தவர் ஆர். கே. சண்முகம் செட்டியார். கோயம்புத்தூரில் செல்வச் செழிப்புள்ள குடும்பத்தில் பிறந்தவர்.

டி. டி. கிருஷ்ணமாச்சாரி

1957,1958,1964,1965 ஆகிய நான்கு ஆண்டுகள் மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்தவர் டி. டி. கிருஷ்ணமாச்சாரி. இவர் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

சி. சுப்பிரமணியம்

1975 முதல் 1977 வரை மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த சி. சுப்பிரமணியம் தமிழ்நாட்டின் பொள்ளாச்சியைச் சேர்ந்தவர்.

ஆர். வெங்கட்ராமன்

தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆர். வெங்கட்ராமன் 1980, 1981ஆம் ஆண்டுகளில் மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார்.

ப. சிதம்பரம்

1997ஆம் ஆண்டு முதல் முறை நிதியமைச்சரானார் ப. சிதம்பரம். தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களில் அதிக முறை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்தவர் இவர்தான். 9 முறை மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறார்.

நிர்மலா சீதாராமன்

2019ஆம் ஆண்டு அருண் ஜேட்லி மறைவைத் தொடர்ந்து நிதி அமைச்சராக பதவியேற்றார் நிர்மலா சீதாராமன். நாட்டின் முதல் பெண் நிதி அமைச்சர் என்ற பெருமைக்கு உரியவரான இவர் 2019ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த ஆண்டு தனது ஐந்தாவது பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார்.

click me!