நீங்களும் 15 ஆண்டுகளில் கோடீஸ்வரர் ஆகலாம்.. இந்த ஃபார்முலாவை ஃபாலோ பண்ணா போதும்..

Published : Jul 30, 2024, 03:21 PM IST

நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை புத்திசாலித்தனமாக முதலீடு செய்தால் நீங்களும் கோடீஸ்வரராகலாம். அந்த வகையில் 15 ஆண்டுகளில் ஒருவர் எப்படி கோடீஸ்வரராகலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

PREV
17
நீங்களும் 15 ஆண்டுகளில் கோடீஸ்வரர் ஆகலாம்.. இந்த ஃபார்முலாவை ஃபாலோ பண்ணா போதும்..
Money

நிறைய பணம் சம்பாதித்து கோடீஸ்வரராக வ்வேண்டும் என்பதே பலரின் விருப்பமாக உள்ளது. ஆனால் சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு இது சாத்தியமா? என்றால் இல்லை என்பதே பெரும்பாலோரின் பதிலாக இருக்கும். ஆனால் சம்பளம் வாங்கும் தனிநபர்களும் கோடீஸ்வரராகலாம் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம். உண்மை தான்.

27
SIP Investment

நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை புத்திசாலித்தனமாக முதலீடு செய்தால் நீங்களும் கோடீஸ்வரராகலாம். சிறந்த முதலீட்டு திட்டங்களில் புத்திசாலித்தனமாக முதலீடு செய்வது மிகவும் முக்கியம். அந்த வகையில் யூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது உங்கள் பணத்தை பெருக்குவதற்கான ஒரு சிறந்த வழியாகக் கருதப்படுகிறது.

37
SIP Investment

எனினும் சந்தையில் ஆயிரக்கணக்கான திட்டங்கள் இருப்பதால், குறுகிய கால மற்றும் நீண்டகால நிதி இலக்குகளை அடைய சந்தை அபாயத்திற்கு உட்பட்டது என்று அறிந்தும் பலரும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்து வருகின்றனர். எதிர்காலத்தில் ரூ. 1 கோடி சம்பாதிப்பதை இலக்காகக் கொண்டால், நீங்கள் 15x15x15 என்ற விதியின் மூலம் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். அது என்ன 15-15-15 விதி? 

47
SIP Investment

ரூ. 1 கோடி சம்பாதிக்கும் இலக்கை அடைய, ஒரு முதலீட்டாளர் SIP மூலம் மாதம் ரூ.15000 முதலீடு செய்ய வேண்டும். அதாவது 15,000 முதலீடு, 15% வட்டி, 15 ஆண்டுகள் தான் 15-15-15 ஃபார்முலா. இந்த ஃபார்முலாவை தொடர்ந்து கடைபிடிப்பது குறிப்பிடத்தக்க அளவு பணத்தை குவிக்கலாம். SIP-யில் ஒரு மாதத்திற்கு ரூ. 15,000 முதலீடு என 15 ஆண்டுகள் முதலீடு செய்தால், மொத்த மூலதனச் செலவு ரூ. 27,00,000 ஆகும்.

57
SIP Investment

இதற்கு 15% வட்டி என்று கணக்கிட்டால் மொத்தம் ரூ.74,52,946 கிடைக்கும். இதன் மூலம் 15 ஆண்டுகளுக்குப் பிறகு, நீங்கள் மொத்தம் ரூ. 1,01,52,946 பெறுவீர்கள். மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான அம்சம் கூட்டு சக்தி. அதாவது இதில் சிறிய தொகையை மாதந்தோறும் முதலீடு செய்தால், பின்னர் அது கூட்டு சக்தியின் மூலம் காலப்போக்கில் பெரிய தொகையாக வளரும். 

 

67
SIP Investment

முதலீட்டாளர்கள் ஒரு SIP திட்டத்தை தேர்வு செய்யலாம் அல்லது பல SIP திட்டங்களில் தங்கள் மூலதனத்தை ஒதுக்கலாம். ஈக்விட்டி,  கடன் மற்றும் ஹைபிரிடு போன்ற பல்வேறு மியூச்சுவல் ஃபண்ட் SIP திட்டங்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் பல வகைகளில் முதலீடு செய்யலாம்.

77
SIP Investment

இதனால் சந்தை ஏற்ற இறக்கத்தால் ஏற்படும் ஆபத்தைக் குறைக்க முடியும்.. ஆனாலும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் முன்பு ஒரு தொழில்முறை நிதி மேலாளருடன் ஆலோசனை பெற்று பின்னர் முதலீடு செய்வது சிறந்தது.

Read more Photos on
click me!

Recommended Stories