உலகிலேயே தொழில்நுட்ப சாதனங்களுக்கு பெயர் போன ஆப்பிள் நிறுவனம், வரலாற்றில் முதன்முறையாக இந்தியாவில் நேரடி சில்லறை விற்பனை நிலையங்களை அமைத்துள்ளது.
211
இந்தியாவில் ஆப்பிளின் முதல் அதிகாரப்பூர்வ சில்லறை விற்பனைக் கடை, மும்பை பாந்த்ரா குர்லா வளாகத்தில் (BKC) உள்ள ஜியோ வேர்ல்ட் டிரைவ் மாலில் இன்று திறக்கப்பட்டது.
311
ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக்கும் கடையின் திறப்பு விழாவில் கலந்து கொண்டார். திறப்பு விழா முன்னிட்டு பலரும் ஐபோன் வாங்க குவிந்திருந்தனர்.
411
ஆப்பிள் ஸ்டோர் திறப்பதற்கு முன் ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக்குடன் ஷில்பா ஷெட்டி போஸ் கொடுத்தார்.
ஆப்பிள் சிஇஓ டிம் குக் உடன் நடிகை மாதுரி தீட்சித், தனது கணவர் ஸ்ரீராம் நேனேவுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
611
மும்பையில் உள்ள முகேஷ் அம்பானியின் வீட்டிற்கு ஆப்பிள் சி.இ.ஓ டிம் குக் சென்றார். அங்கு அவர் பல தொழிலதிபர்களை சந்தித்தார். இந்த நேரத்தில் முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி மற்றும் மகள் இஷா அம்பானியும் டிம் குக்கை சந்தித்தனர்.
711
ஆப்பிள் ஸ்டோரின் முன் வெளியீட்டு நிகழ்வில் டிம் குக்குடன் ரவீனா டாண்டன் தனது மகனுடன் எடுத்த புகைப்படம்.
811
ஆப்பிள் ஸ்டோர் தொடங்குவதற்கு முன் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானுடன் டிம் குக் எடுத்துக்கொண்ட புகைப்படம்.
911
ஆப்பிள் ஸ்டோர் தொடங்குவதற்கு முன்பு மௌனி ராய் தனது கணவர் சுராஜ் நம்பியாருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்.
1011
ஆப்பிள் ஸ்டோர் தொடங்குவதற்கு முன்பு ரவீனா டாண்டன், சோனாலி பிந்த்ரே மற்றும் வித்யா பாலன் எடுத்துக்கொண்ட புகைப்படம்.
1111
மாதுரி தீட்சித் ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக்கை மும்பையில் வாடா பாவ் உடன் உபசரித்தார். இது தொடர்பான படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.