Gold Rate Today : தாறுமாறாக விலை குறைந்த தங்கம்.. தங்கம் வாங்க சரியான நேரம் இதுதான்!!

First Published Apr 17, 2023, 9:44 AM IST

கடந்த சில வாரங்களாக விலை உயர்ந்து வந்தது தங்கத்தின் விலை. இந்தநிலையில்,  இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலையை காணலாம்.

2023ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. நகை வாங்குவோரிடையே, குறிப்பாக இல்லத்தரசிகளிடையே இது கவலையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த வருடம் தங்கமானது சவரனுக்கு 44 ஆயிரத்துக்கும் மேல் உயர்ந்து உச்சத்தை தொட்டது.  இருப்பினும் நகை வாங்குவோரிடையே தங்கம் வாங்க வேண்டும் என்ற ஆர்வம் மட்டும் குறையவில்லை.

நேற்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.45,200க்கும், கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.5,650க்கும் விற்பனையானது.

இன்றைய (ஏப்ரல் 17) நிலவரப்படி, தங்கத்தின் நேற்றைய விலையே இன்றும் தொடர்கிறது. வெள்ளி விலையை பொறுத்தவரை, ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.1,500 குறைந்து ரூ.81,500க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அட்ச திருதியை முன்னிட்டு பொதுமக்கள் ஆர்வத்துடன் தங்கம் வாங்கி வருவதால், வரும் நாட்களில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க..ஜிஎஸ்டி விதியில் அதிரடி மாற்றம்.. மே 1 முதல் ஜிஎஸ்டி விதிகள் மாறுகிறது - முழு விபரம்

click me!