ஓய்வுக்குப் பிறகு நிதிச் சிக்கல்களை சந்திக்கும் மூத்த குடிமக்களுக்கு, அஞ்சலகத்தின் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS) ஒரு சிறந்த தீர்வாகும். வருமான வரிச் சட்டம் 80C-யின் கீழ் வரிச்சலுகைகளையும் அளிக்கிறது.
பல மூத்த குடிமக்கள் ஓய்வுக்குப் பிறகு, மாதாந்திர வருமானம் இல்லாததால் சில நிதி சிரமங்களை சந்திக்கிறார்கள். செலவுகளுக்காக குழந்தைகள் அல்லது பிறரிடம் சார்ந்து வாழ வேண்டிய நிலை வரலாம். இப்படியான சூழலில், அஞ்சலகம் வழங்கும் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS) ஒரு நம்பகமான மற்றும் லாபகரமான முதலீட்டு வாய்ப்பு. பாதுகாப்பும், நிலையான வருமானமும் தரும் இந்தத் திட்டம், ஓய்வு பெற்றவர்களுக்கு மிக உதவிகரமாக இருக்கும்.
24
யார் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம்?
60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட எந்த மூத்த குடிமக்களும் இதில் கணக்கு தொடங்கலாம். அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களும் இதில் சேரலாம். மேலும், 55 முதல் 60 வயது வரை ஓய்வு பெற்றவர்களும் சில நிபந்தனைகளின் அடிப்படையில் இந்தத் திட்டத்திற்கு தகுதியுடையவர்கள். இதனால், ஓய்வு பெற்ற பிறகு வருமானத்தை நிரந்தரமாக வைத்திருக்க இது சிறந்த வாய்ப்பு.
34
முதலீடு, வட்டி மற்றும் வருமானம்
இந்த திட்டத்தில் குறைந்தது ரூ.1,000 முதலீடு செய்து கணக்கைத் தொடங்கலாம். அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை முதலீடு செய்யலாம். தற்போது, இந்தத் திட்டம் வருடத்திற்கு 8.2% வட்டி வழங்குகிறது. வட்டி 3 மாதத்திற்கு ஒருமுறை கணக்கில் சேர்க்கப்படும். உதாரணமாக, நீங்கள் ரூ.30 லட்சம் முதலீடு செய்தால், மாதம் சுமார் ரூ.20,500 வருமானம் கிடைக்கும். இது ஓய்வுக்குப் பிறகு ஒரு நிலையான வருமானமாக இருக்கும்.
SCSS திட்டத்தின் முதற்கட்ட காலம் 5 ஆண்டுகள். தேவையெனில், அதை மேலும் 3 ஆண்டுகள் நீட்டிக்கலாம். நீண்ட கால வட்டியை எடுக்காமல் தொடர்ந்தால், 5 ஆண்டுகளின் முடிவில் உங்கள் முதலீடு சுமார் ரூ.42 லட்சம் வரை உயர வாய்ப்பு உள்ளது. மேலும், இந்த முதலீடு வருமான வரி சட்டம் 80C கீழ் வரிச்சலுகைக்கு தகுதி பெறும். அரசு உத்தரவாதத்துடன் வரும் இந்த திட்டம், ஓய்வு காலத்திலும் உங்களை நிதி ரீதியாக உறுதியாக வைத்திருக்க உதவும்.