தலைகீழா நின்னாலும் இவர்களுக்கு பணம் போகாது.. வேற லெவலில் போன்பேவின் புதிய அப்டேட்

Published : Nov 04, 2025, 10:52 AM IST

போன்பேவின் இந்த அம்சம் தொலைத்தொடர்பு துறையின் தரவுகளைப் பயன்படுத்தி, சந்தேகத்திற்கிடமான எண்களுக்குப் பணம் அனுப்பும்போது பயனர்களை எச்சரிக்கிறது. இது பயனர்களின் பணத்தைப் பாதுகாக்கிறது.

PREV
13
போன்பே பாதுகாப்பு அம்சம்

ஆன்லைன் பேமெண்ட் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், பயனர்களின் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் போன்பே (PhonePe) நிறுவனம் புதிய பாதுகாப்பு அம்சமான ‘போன்பே Protect’-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. பணம் அனுப்பும் போது, ​​எதிர்ப்புற எண் சந்தேகத்திற்கிடமானது என்றால் உடனே எச்சரிக்கை செய்தி காட்டப்படும். அதே நேரத்தில், மிகவும் ஆபத்தான எண் என பட்டியலிடப்பட்டிருந்தால், அந்த பரிவர்த்தனையை போன்பே தானாகவே தடுத்து விடும். இதனால் தவறாக மோசடி செய்பவர்களுக்கு பணம் அனுப்புவதை தவிர்க்க முடியும்.

23
போன்பே Protect எப்படி வேலை செய்கிறது?

இந்த அம்சம் தொலைத்தொடர்பு துறை (DoT) வழங்கும் நிதி மோசடி ஆபத்து காட்டி (FRI) தரவுத்தளத்தைப் பயன்படுத்துகிறது. DoT-யால் ‘அதிக அபாயம்’ எனக் குறிக்கப்பட்ட எண்கள் கண்டறியப்பட்டவுடன், போன்பே உடனடியாக ஆபத்தான எச்சரிக்கை காட்டுகிறது அல்லது பரிவர்த்தனையை நிறுத்துகிறது. ‘மிதமான அபாயம்’ உள்ள எண்களுக்கு நீங்கள் பணம் அனுப்புவதற்கு முன் ஒரு எச்சரிக்கை தகவல் வழங்கப்படும். இது பயனர்களை யோசித்து செயல்பட வைக்கும். இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் முதல் நிறுவனங்களில் போன்பே ஒன்று குறிப்பிடத்தக்கது.

33
பேமெண்ட் எச்சரிக்கை

இந்த பாதுகாப்பு முறையின் மூலம், தெரியாமல் ஏமாற்றுபவர்களுக்கு பணம் அனுப்பும் நிலை தவிர்க்கப்படும். மேலும், பாதுகாப்பு காரணங்களால் பரிவர்த்தனை தடுக்கப்பட்டால், அதன் காரணத்தையும் செயலி தெளிவாக தெரிவிக்கும். இதனால் பயனர்கள் தங்கள் பணம் பாதுகாப்பாக இருப்பதை உணர முடியும். இது பாசிடிவ் பேமெண்ட் அனுபவத்தையும் நம்பிக்கையையும் அதிகரிக்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories