மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்ட கணக்கு (SCSS) அடிப்படை அம்சங்கள்
இந்தத் திட்டம் 8.20 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) திட்டத்திற்கு பிறகு அதிக வட்டி வழங்கும் போஸ்ட் ஆபிஸ் திட்டங்களில் ஒன்றாகும். 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், 55 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 60 வயதுக்குட்பட்ட ஓய்வுபெற்ற சிவில் பணியாளர்கள், 50 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 60 வயதுக்குட்பட்ட ஓய்வுபெற்ற பாதுகாப்புப் பணியாளர்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.