கீழ்சாதி பெண் மற்றும் ஆண் திருமணம் செய்தவர்களுக்கு மத்திய அரசு சார்பில் ரூ.2.5 லட்சம் வழங்கப்படுகிறது. மாற்று சாதிப் பெண்/ஆண் திருமணம் செய்தவரா நீங்கள். இந்த ஊக்கத்தொகையை பெறுவது எப்படி? முழுவிபரம் இதோ!
சாதிகளுக்கு இடையேயான திருமணங்களை ஊக்குவிக்கும் முயற்சியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, டாக்டர் அம்பேத்கர் அறக்கட்டளையின் (DAF) கீழ் சமூக ஒருங்கிணைப்புக்கான டாக்டர் அம்பேத்கர் திட்டத்தை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. அதன்படி தலித் ஆண்/பெண் திருமணத்திற்கு ரூ.2.5லட்சம் மத்திய அரசு வழங்குகிறது.
25
சாதிகளுக்கு இடையேயான திருமணமான தம்பதிகளுக்கு அவர்களின் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்காக அவர்களுக்கு இந்த நிதி வழங்கப்படுகிறது.
முன்னதாக, தம்பதியரின் ஆண்டு வருமானம் 5 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை இருந்தது. இருப்பினும், வருமான வரம்பு 2017ம் ஆண்டு முதல் நீக்கப்பட்டது. இது தம்பதியரின் நிதி நிலையைப் பொருட்படுத்தாமல் ஊக்கத்தொகையை அணுகக்கூடியதாக மாற்றியது.
35
மோசடி வாய்ப்புகளை குறைக்க, மத்திய அரசு வழங்கும் ரூ.2.5 லட்சம் ஊக்கத்தொகை இரண்டு தவணைகளில் வழங்கப்படுகிறது. தம்பதியினர் தங்கள் புதிய வாழ்க்கையில் குடியேற உதவும வகையில் முதல் தவனையாக 1.5 லட்சம் ரூபாய்யும், மீதமுள்ள ரூ. 1 லட்சம் அவர்களின் கூட்டு வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும். அதனை, முதல் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மட்டுமே அணுக முடியும்.
கணவன் அல்லது மனைவி இருவரில் ஒருவர் பட்டியல் சாதி பிரிவைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பத்தில் ஒரு MP./MLA./மாவட்ட கலெக்டரின் சிபாரிசு இருக்க வேண்டும். மேலும் அதை, இந்து திருமணச் சட்டம் 1955ன் கீழ் திருமணச் சான்றிதழின் நகல், சாதிச் சான்றிதழ் போன்ற தேவையான ஆவணங்களுடன் மாநில அரசால் அறக்கட்டளைக்கு அனுப்பப்பட வேண்டும்.
SC பிரிவைச் சேர்ந்த கணவன்/மனைவியின் கூட்டு வங்கிக் கணக்கு எண்ணும், இந்து திருமணச் சட்டம் 1955ன் கீழ் திருமணம் பதிவு செய்யப்பட வேண்டும்.
இது தம்பதியரின் முதல் திருமணமாக இருக்க வேண்டும்.
மாநில அரசு மூலம், ஏற்கனவே ஜாதிகளுக்கு இடையேயான திருமண ஊக்கத்தொகையை பெற்றவர்களாக இருப்பின் செலுத்தியதால், அவர்கள் அறக்கட்டளையின் கூடுதல் உதவிக்கு தகுதியற்றவர்கள்.
திருமணமான ஒரு வருடத்திற்குள், அரசின் இந்த உதவித்தொகை கேட்டு சமர்பிக்கப்பட வேண்டும்
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.