சிறிய தொகை UPI பரிவர்த்தனைகள் கூட வருமான வரித்துறையின் கண்காணிப்பில் உள்ளன. சேவைகளுக்கான கட்டணமாகக் கருதப்படும் தொகைகள் வருமானமாகக் கணக்கிடப்பட்டு, வருமான வரி அறிக்கையில் தெரிவிக்கப்பட வேண்டும்.
நாம் இன்று எல்லா இடங்களிலும் யுபிஐ மூலம் தான் பணம் செலுத்துகிறோம். டீக்கடை முதல் பெட்ரோல் பங்க் வரை என்று அந்த பட்டியலை நீட்டித்துக்கொண்டே போகலாம். கடை முதல் வீட்டு வேலை செய்பவர்கள் வரை பேடிஎம் (Paytm), கூகுள் பே (Google Pay), போன் பே (PhonePe) போன்ற UPI செயலிகள் மூலம் பணம் செலுத்துகிறோம். தினசரி ரூ.100-ரூ.200 போன்ற சிறிய தொகைகள் அனுப்பப்படுவதால், அந்த வரி கணக்கில் கவனிக்கப்படாது என்று நீங்கள் நினைத்தால் அது தவறு.
25
வருமான வரித்துறை கண்காணிப்பு
நீங்கள் அனுப்பும் பணம் ஒரு சேவைக்காக (டியூஷன், வீட்டுப்பணி, ஃப்ரீலான்ஸ்) என்றால், அது ஒரு வருமானமாகவே கருதப்படுகிறது. இதனை உங்கள் வருமான வரி (ITR) குறிப்பிட வேண்டும். இல்லையெனில் வருமான வரித் துறையில் எதிர்காலத்தில் நோட்டீஸ் வரலாம் என்று நிதி ஆலோசகர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
35
ரீபீட் டிரான்ஸ்ஃபர் கவனிக்கப்படும்
ஒரே நபருக்கு அடிக்கடி ஒரே அளவு பணம் செலுத்துவது, ஒரே பணம் வாரம் தோறும் திரும்ப திரும்ப அனுப்புவது போன்ற பரிவர்த்தனைகள், ஒரு சேவைக்கான கட்டணம் என வரி துறையால் கருதப்படும். இந்த தகவல்கள் NPCI மற்றும் வங்கிகளின் மூலம் IT துறைக்கு சென்றுவிடும்.
உங்கள் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்குள் இருந்தால் வரி கட்ட வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் நீங்கள் வீட்டிலிருந்தே டியூஷன், ஆன்லைன் சேவைகள், ஃப்ரீலான்ஸ் பணி போன்றவற்றில் ஈடுபட்டு பணம் சம்பாதித்தால், அது ‘வருமானம்’ ஆகும். அதனால் அது ITR-ல் பதிவு செய்யப்பட வேண்டும்.
55
பரிவர்த்தனை விவரங்கள்
நாம் செய்யும் UPI பரிவர்த்தனைகள் சிறியதாக இருந்தாலும், அவை அனைத்தும் NPCI மற்றும் வங்கியின் வழியாக வரி துறையிடம் சேரும். எனவே, "சிறிய தொகைதான், யாரும் கவனிக்க மாட்டார்கள்" என நம்புவது இப்போது பாதுகாப்பான வழி அல்ல. எனவே வருமான வரித்துறையிடம் உங்கள் கணக்குகளை சரியாக சமர்ப்பிப்பது அவசியம்.