எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் உஷார்.. டிசம்பர் 1 முதல் இந்த சேவை கிடைக்காது.!

Published : Nov 16, 2025, 10:04 AM IST

டிசம்பர் 1, 2025 முதல், எஸ்பிஐ தனது குறிப்பிட்ட இந்த சேவையை நிறுத்துகிறது. இதற்கு மாற்றாக, வாடிக்கையாளர்கள் பிற பணப்பரிவர்த்தனை முறைகளைப் பயன்படுத்தலாம் என வங்கி அறிவுறுத்தியுள்ளது.

PREV
13
எஸ்பிஐ முக்கிய அறிவிப்பு

டிசம்பர் 1, 2025 முதல் எஸ்பிஐ ஒரு முக்கிய சேவை நிறுத்தப்படுகிறது. OnlineSBI மற்றும் YONO Lite ஆகியவற்றில் mCASH பணமாற்று வசதி நவம்பர் 30, 2025க்குப் பிறகு பயன்படுத்த முடியாது. இதனால், முன்பைப் போல மொபைல் நம்பர் அல்லது இமெயில் அடிப்படையில் பணம் அனுப்புவது அல்லது பெறுவது சாத்தியமில்லை. இந்த சேவை நிறுத்தப்படுவதால், வாடிக்கையாளர்கள் UPI, IMPS, NEFT, RTGS போன்ற மாற்று முறைகளை தவறாமல் பயன்படுத்த வேண்டும் என்று எஸ்பிஐ அறிவுறுத்தியுள்ளது. mCASH என்பது பயனாளர் பயனாளி-ஆகச் சேர்க்காமல், வெறும் மொபைல் எண் அல்லது இமெயில் மூலம் பணம் அனுப்ப அனுமதிக்கும் எளிய சேவையாகும்.

23
டிசம்பர் 1 முதல்

SBI வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் OnlineSBI அல்லது State Bank Anywhere மூலமாக பணம் அனுப்பலாம்; பெறுபவர் SMS அல்லது மின்னஞ்சல் மூலம் ஒரு பாதுகாப்பான இணைப்பு மற்றும் 8 இலக்க பாஸ்கோடு பெறுவார். அந்த லிங்க் அல்லது SBI mCASH ஆப்பை பயன்படுத்தி, யாரும் தங்கள் வங்கி கணக்கில் அந்தத் தொகையைப் பெற்றுக் கொள்ளலாம். mCASH ஆப்பை பயன்படுத்தும் முறை மிகவும் எளிது. Google Play Store-இல் இருந்து ஆப்பை பதிவிறக்கம் செய்து, MPIN அமைத்தால் போதும். அந்த MPIN மூலம் லாகின் செய்து, பெறப்பட்ட பணத்தை எந்த வங்கிக் கணக்கிலும் மாற்றிக் கொள்ளலாம். அடுத்த முறை எளிதாக பெற பிடித்த கணக்கு அமைக்கும் வசதியும் இருந்தது.

33
mCASH சேவை நிறுத்தம்

இப்போது mCASH நிறுத்தப்பட்டதால், SBI வாடிக்கையாளர்கள் UPI போன்ற விரைவான மற்றும் பாதுகாப்பான வழிகளைப் பயன்படுத்தலாம். BHIM SBI Pay ஆப் மூலம் எந்த வங்கிக் கணக்கிற்கும் உடனடி பணமாற்று செய்யலாம். பில் பணப்பரிவர்த்தனைகள், ரீசார்ஜ்கள், ஷாப்பிங் போன்ற பல சேவைகளும் கிடைக்கும். UPI மூலம் பணம் அனுப்பப்படும், BHIM SBI Pay ஆப்பை திறந்து 'Pay' என்பதைத் தேர்வு செய்ய வேண்டும். பின்னர் VPA, கணக்கு + IFSC அல்லது QR குறியீடு போன்ற விருப்பங்களில் ஒன்றைத் தேர்வு செய்து விவரங்களை உள்ளிட வேண்டும். டெபிட் செய்ய வேண்டிய வங்கிக் கணக்கைத் தேர்வு செய்து, UPI PIN ஐ உள்ளிடுவது, ‘டிக்’ மார்க் அழுத்துவதும் பரிவர்த்தனை உடனே நிறைவடையும். இதன் மூலம் mCASH நிறுத்தப்பட்டாலும், வாடிக்கையாளர்களுக்கு எந்தத் தடையும் இல்லாமல் பணமாற்று சாத்தியம் தொடர்கிறது.

Read more Photos on
click me!

Recommended Stories