எஸ்பிஐ பேங்க் மூலம் மாதம் ரூ.1 லட்சம் வரை சம்பாதிக்கலாம்! இந்த ஆவணங்கள் இருந்தா மட்டும் போதும்!

First Published May 31, 2023, 6:03 PM IST

SBI Latest News: எஸ்பிஐ பேங்கின் ஏடிஎம் ஃபிரான்சைஸ் உரிமத்தை பெறுவதன் மூலமாக வீட்டிலிருந்தபடியே ஒவ்வொரு மாதமும் ரூ.45 ஆயிரம் தொடங்கி ரூ.90 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் ஈட்டலாம். 

வங்கிகளுடைய ஏடிஎம் மூலமாக வருமானம் ஈட்டுவது குறித்து இப்போது பலருக்கும் விழிப்புணர்வு இருக்கிறது. பிற தொழில்களை காட்டிலும் வங்கிகளின் ஏடிஎம் ஃபிரான்சைஸ் குறைந்த முதலீட்டில் நல்ல வருமானம் தரும் தொழிலாகவே கருதப்படுகிறது. இதன் வாயிலாக ஒவ்வொரு மாதமும் ரூ.45 ஆயிரம் தொடங்கி ரூ.90 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் ஈட்டலாம். பல்வேறு வங்கிகள் ஏடிஎம் உரிமத்தை வழங்கினாலும், பாரத ஸ்டேட் வங்கியின் (SBI) ஏடிஎம் உரிமையை எப்படி பெறலாம் என்பதை காணலாம். 

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தன்னுடைய ஏடிஎம்ஃபிரான்சைஸ் உரிமத்தை சில முக்கியமான ஆவணங்களின் அடிப்படையில் வழங்குகிறது. இந்த உரிமத்தை பெற விண்ணப்பதாரர்கள் சில ஆவணங்களும் தகுதியும் கொண்டிருந்தால் போதும். எளிமையாக சொல்ல வேண்டுமானால் எஸ்பிஐ ஏடிஎம் ஃபிரான்சைஸ் என்பது குறைந்த முதலீட்டில் கணிசமான வருமானம் ஈட்டும் தொழிலாகும். 

இந்த வாய்ப்பை பெற உங்களுக்கு சொந்தமான நிலம் இருக்க வேண்டும். நீங்கள் நிறுவும் ஏடிஎம்மில் நாள்தோறும் 300 முதல் 500 வரை பரிவர்த்தனைகள் நடந்தால் கூட போதும். மாதந்தோறும் ரூ. 45 ஆயிரம் முதல் ரூ. 90 ஆயிரம் வரை உங்களுக்கு வருமானம் வரும். எஸ்பிஐ ஏடிஎம் உரிமையை வாங்க சுமார் ரூ.5 லட்சம் நீங்கள் முதலீடாக கொடுக்க வேண்டும். இந்தத் தொகையில் ரூ.2 லட்சம் திரும்பப்பெறும் தொகையாக உள்ளது. மீதமுள்ள ரூ.3 லட்சம் தான் மூலதனம். ஒருவேளை ஏடிஎம் உரிமை பெறுவதற்கான ஒப்பந்தம் முடியும் முன்பாக ஏதாவது காரணத்திற்காக ஏடிஎம் இயக்குவதை நிறுத்த முடிவு செய்யப்படும்பட்சத்தில் எஸ்பிஐ ரூ.1 லட்சம் தான் உங்களுக்கு திரும்ப வழங்கும். 

எஸ்பிஐ ஏடிஎம் உரிமம் பெறுவதற்கு என்னென்ன தகுதிகள்: 

சொந்தமாக 50 முதல் 80 சதுர அடி வரை நிலம் வைத்திருக்க வேண்டும். முக்கியமாக ஏடிஎம் வைக்கவுள்ள இருப்பிடத்திலிருந்து 100 மீட்டருக்குள் மற்ற வங்கியின் ஏடிஎம் ஏதும் இருக்கவே கூடாது. 

விண்ணப்பதாரர் நாள்தோறும் குறைந்தது 300 அல்லது அதற்கும் மேற்பட்ட பண பரிவர்த்தனைகள் நிகழும் உத்தரவாதம் கொடுக்க வேண்டும்.

ஏடிஎம் பாதுகாப்பாக இருப்பதற்கு ஏற்ற உறுதியான கான்கிரீட் கூரை கட்டாயம். 

ATM V-SAT நிறுவ அதிகாரிகள் அல்லது சமூகத்திடம் இருந்து NOC எனும் அதாவது தடையில்லாச் சான்றிதழ் பெற வேண்டும். 

விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்:

எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம் உரிமையை வாங்க கேஒய்சி சரிபார்ப்பு அவசியம். இதற்கான அடையாள சான்றுகள்: ஆதார் அல்லது வாக்காளர் அட்டை, பான் கார்டு, மின்சார கட்டணம், ரேஷன் கார்டு, முகவரி சான்றாக வங்கி கணக்கு புத்தகம், நான்கு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், மின்னஞ்சல் முகவரி, பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண், ஜிஎஸ்டி பதிவு ஜிஎஸ்டி எண் ஆகியவை கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும். கடந்த மூன்று ஆண்டுகளுக்கான இருப்பு நிதி, லாபம், நிதி இழப்பு கணக்கு போன்ற நிதி ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். எஸ்பிஐ ஏடிஎம் உரிமையை பெற விரும்பினால் ஆன்லைன் மூலமாக அந்த வங்கியின் அதிகாரப்பூர்வ இணைதளத்தில் விண்ணப்பிக்கலாம். 

click me!