சமூக ஊடகங்களில் பரவும் எஸ்பிஐ ரூ.2 லட்சம் வழங்கும் தகவல் உண்மையில் ஒரு தனிநபர் கடன் சலுகையாகும். இதனைப் பற்றிய முழுமையான விவரங்களை இங்கு விரிவாக காண்போம்.
சமூக ஊடகங்களில் சமீபமாக ஒரு வீடியோ வேகமாக பரவி வருகிறது. “எஸ்பிஐ வங்கியில் பழைய வாடிக்கையாளர்களுக்கு ரூ.2 லட்சம் பணம் தருகிறார்கள்” என்று பலர் பகிர்ந்து வருகின்றனர். இதைக் கேட்டு பலருக்கும் சந்தேகம் வரும். உண்மையில் இது நேரடியாக இலவசமாக பணம் கொடுக்கும் திட்டம் அல்ல. எஸ்பிஐ வங்கியில் சில வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் பர்சனல் லோன் (தனிநபர் கடன்) சலுகை பற்றித்தான் இந்த தகவல் பேசப்படுகிறது.
25
எஸ்பிஐ 2 லட்சம் வைரல் வீடியோ
இந்த வைரல் தகவல் அடிப்படையில் கூறுவது என்னவென்றால், எஸ்பிஐ வாடிக்கையாளர் என்றால் மட்டுமே ரூ.2 லட்சம் என்பதல்ல. பொதுவாக, சம்பளக் கணக்கு (சம்பளக் கணக்கு) வைத்திருப்பவர்கள், மாத வருமானம் குறைந்தது ரூ.15,000 இருப்பவர்கள், மற்றும் CIBIL ஸ்கோர் 650 அல்லது 700க்கு மேல் உள்ளவர்களுக்கு இவ்வகை கடன் பெறுவதற்கான வாய்ப்பு அதிகம். அதாவது வங்கி உங்கள் தகுதியைப் பார்த்துத்தான் ஒப்புதல் தரும்.
35
எஸ்பிஐ 35 லட்சம் வரை கடன்
இந்த சலுகை பற்றி சில இடங்களில் “RTXC” என சொல்லப்படுகிறது. இதில் ரூ.2 லட்சம் மட்டுமல்ல, வாடிக்கையாளர் தகுதி மற்றும் வருமானத்தைப் பொறுத்து அதிகபட்சமாக ரூ.35 லட்சம் வரை தனிநபர் கடன் பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக, இது எஸ்பிஐ வழங்கும் கடன் விதிமுறைகள் மற்றும் வட்டி விகிதம் வாடிக்கையாளருக்கு மாறுபடலாம்.
சில நேரங்களில் திடீரென செலவுகள் அதிகமாகி பணத்தேவை வெளி. நண்பர்கள் அல்லது உறவினர்களிடம் கேட்டால் முழுத் தொகை உடனே கிடைக்காமல் போகும். அப்படிப்பட்ட நேரத்தில், பர்சனல் லோன் ஒரு தீர்வாக இருக்கலாம். குறிப்பாக எஸ்பிஐ கணக்கு இருந்தால் விண்ணப்பிப்பது எளிதாகும்.
55
எஸ்பிஐ 2 லட்சம்
இந்த கடனுக்கு விண்ணப்பிக்கவும், உங்கள் மொபைலில் உள்ள YONO SBI செயலி மூலம் சில நிமிடங்களில் முயற்சி செய்யலாம். சம்பளக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இது வசதியாக இருக்கும். ஆனால் இறுதியாக ஒப்புதல் கிடைப்பது உங்கள் தகுதி, வருமானம், கிரெடிட் ஸ்கோர் போன்ற விஷயங்கள் அடிப்படையில்தான் நினைவில் கொள்ளுங்கள்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.