வங்கி சேமிப்பு கணக்கு AI மூலம் கண்காணிக்கப்படுவதால், பணத்தின் மூல ஆதாரத்திற்கான ஆவணங்களை சரியாக வைத்திருக்காவிட்டால் வரித்துறையிடமிருந்து நோட்டீஸ் வர வாய்ப்புள்ளது. இந்த லிமிட் தொடர்பான விதிகளை அறிந்து கொள்வது அவசியம்.
சமீபத்தில் உங்களுக்கு தெரிந்தவர்கள் யாருக்காவது வருமானம் வரித்துறையிலிருந்து நோட்டீஸ் பெற்றதாக கேட்டிருக்கலாம். “என்னிடம் இத்தனை பணமே இல்லை” என்று சொன்னாலும், அவர்களுக்கு நோட்டீஸ் வந்திருக்கும். இதே நிலைமை உங்களுக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதற்கு முக்கிய காரணம் வங்கிக் கணக்கில் அதிக தொகை பரிமாற்றமே. இப்போது வரித்துறை (AI) மூலம் கண்காணிப்பு நடத்தப்படுகிறது. சரியான பதில் அளிக்காமல் நோட்டீஸ் வந்தால், அதனால் பெரும் சிக்கல்கள் ஏற்படும். எனவே, கணக்கு வைத்திருப்போர் சில முக்கிய விதிகளை பின்பற்ற வேண்டும்.
24
வங்கிக் கணக்கில் பரிமாற்ற விதிகள்
வரி நிபுணர் சி.ஏ கமலேஷ் குமார் கூறுவதாவது, “சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் ஒரே நேரத்தில் பெரிய தொகையை பரிமாற்றம் செய்ய வேண்டாம். வருடத்தில் ரூ.10 லட்சம் அல்லது அதற்கு மேல் சேமிப்பு கணக்கில் சேர்க்கப்பட்டால், அந்த தகவலை வங்கி நேரடியாக வரித்துறைக்கு அனுப்பப்படும். தொடர்ந்து அதிக தொகை பண வரவு–செலவு நடந்தாலும், பணத்தின் மூல ஆதாரம் தெரியாமல் இருந்தாலும் சந்தேகத்திற்கு இடமாகும். அப்போது வரித்துறையிடமிருந்து நோட்டீஸ் வரும் அபாயம் உள்ளது.
34
சேமிப்பு கணக்கு விதிகள்
முதலில், பெரிய அளவில் (ரூ.10 லட்சம் மேல்) பண பரிமாற்றம் செய்தால், அதன் ஆதாரம் தெளிவாக இருக்க வேண்டும். இரண்டாவது, அடிக்கடி பெரிய அளவிலான வரவு, செலவு செய்தால் வங்கி சந்தேகப்படும். மூன்றாவது, பணம் எங்கிருந்து வந்தது, யார் கொடுத்தார்கள் என்ற விவரம் தொடர்புடைய ஆவணங்களுடன் வைத்திருக்க வேண்டும். உதாரணத்திற்கு, உறவினர் ஒருவரிடம் இருந்து ரூ.10 லட்சம் வந்தால், அதற்கான ஆதாரத்தை வைத்திருக்க வேண்டும்.
பெரிய பரிமாற்றங்களுக்கு PAN கார்டும் KYC செயல்முறையும் கட்டாயம். ஒவ்வொரு வங்கியும் தங்களது கணக்கு வைத்திருப்போரின் செயற்பாடுகளை கண்காணிக்கிறது. குறிப்பாக அசாதாரணமாக அதிக தொகை வரவு–செலவு நடந்தால், “இந்தப் பணம் எங்கிருந்து வந்தது?” என்று வங்கி கேட்கும். சில நேரங்களில் வங்கியும் நேரடியாக நோட்டீஸ் அனுப்பப்படும். எனவே, விதிகளை பின்பற்றி செயல்பட்டால் வரித்துறை நோட்டீஸ் அபாயத்திலிருந்து தப்பிக்கலாம்.