வீட்டை விற்று.. வரி கட்டாமல் புதிய வீடு வாங்கும் ரகசியம்.. இப்போதே தெரிந்து கொள்ளுங்கள்.!

Published : Sep 23, 2025, 09:14 AM IST

புதிய வீடு (New Home) வாங்கும் கால எல்லை விற்ற நாளிலிருந்து 1 வருடத்திற்கு முன் அல்லது 2 ஆண்டிற்குள் வாங்க வேண்டும். கட்டும் போது 3 ஆண்டிற்குள் முடிக்க வேண்டும்.

PREV
15
வருமான வரி சட்டம்

மியூச்சுவல் பண்டுகள், பங்குகள் அல்லது வீடு, நிலம் போன்றவை சொத்துக்களை விற்பனை செய்யும் போது நீண்டகால மூலதன வரி (நீண்ட கால மூலதன ஆதாயங்கள் – LTCG) விதிக்கப்படும். ஆனால், சரியான திட்டமிடலுடன் வருமான வரி சட்டத்தின் பிரிவு 54 மற்றும் 54F மூலம் அந்த வரியைத் தவிர்க்கலாம். பலருக்கும் இந்த சட்டங்கள் சிக்கலாகத் தோன்றினாலும், எளிமையாகப் பார்த்தால் வரிச் சுமையை குறைக்க உதவும் சிறந்த வழிகள் கிடைக்கின்றன.

25
பிரிவு 54F - வீடல்லாத சொத்துக்கள் விற்பனைக்கு சலுகை

நீங்கள் தங்கம், நிலம், மியூச்சுவல் பண்டுகள் போன்ற வீடல்லாத சொத்துகளை விற்றால், அந்த தொகையை புதிய வீடு வாங்கினால், LTCG வரியில் இருந்து விலக்கு பெறலாம். ஆனால் முக்கிய நிபந்தனை என்னவென்றால், விற்பனை செய்யும் நாளில் நீங்கள் ஒரே ஒரு வீட்டை வைத்திருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, 2025-26 நிதியாண்டில் ஈக்விட்டி மியூச்சுவல் பண்டை விற்று அந்த பணத்தில் வீடு வாங்கினால், ஒரே ஒரு வீடு மட்டுமே இருந்தால் நீங்கள் விலக்கு பெறலாம்.

35
பிரிவு 54 - வீடு விற்பனைக்கு சலுகை

ஒரு வீடு விற்று அதிலிருந்து கிடைக்கும் மூலதன லாபத்தை புதிய வீடு வாங்கினால், பிரிவு 54 மூலம் வரியில் விலக்கு பெறலாம். இங்கே, நீங்கள் எத்தனை வீடுகள் வைத்திருக்கிறீர்கள் என்பதில் எந்தத் தடையும் இல்லை. புதிய வீடு வாங்கும் அல்லது கட்டும் கால வரம்புகள் மட்டுமே பின்பற்றப்பட வேண்டும். விற்ற நாளிலிருந்து 1 வருடத்திற்கு முன், அல்லது 2 ஆண்டிற்குள் வாங்கலாம்; 3 ஆண்டிற்குள் கட்டிக்கொள்ளலாம்.

45
இரண்டு பிரிவுகளையும் பயன்படுத்தும் வழி

சில சூழல்களில், பிரிவு 54 மற்றும் 54F இரண்டையும் ஒரே சொத்துக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், நிபந்தனைகளை முறையாகக் கடைபிடிக்க வேண்டும். வரி நிபுணர்கள் கூறுவதாவது, நீங்கள் மியூச்சுவல் பண்டை விற்க விரும்பினால், அதற்கு முன்பு உங்கள் வீட்டில் ஒன்றை விற்று விடுவது நல்லது. இது “ஒரே ஒரு வீடு வைத்திருப்பது” என்ற நிபந்தனையை மீறாமல் இருக்க உதவும்.

55
நீண்டகால மூலதன வரி

சொத்துக்கள் விற்பனை செய்தால், அந்த பணத்தை வீடு வாங்குவதற்கு பயன்படுத்தினால் நீண்டகால மூலதன வரி கட்ட வேண்டும் அவசியமில்லை. சரியான திட்டமிடலுடன் பிரிவு 54 மற்றும் 54F-ஐ பயன்படுத்தினால், பெரிய அளவில் வரிச் சுமையை குறைத்து உங்கள் செல்வத்தை பாதுகாக்கலாம் என்று கூறுகின்றனர்.

Read more Photos on
click me!

Recommended Stories