ரூ.333 போட்டா போதும்.. சொளையா 17 லட்சம் போஸ்ட் ஆபிசில் கிடைக்கும்.. செமயான திட்டம்

Published : Aug 13, 2025, 08:51 AM IST

போஸ்ட் ஆபிஸ் ரெக்கரிங் டெப்பாசிட் (RD) திட்டத்தில் ரூ.333 சேமிப்பதன் மூலம், 17 லட்சம் ரூபாய் வரை நிதி உருவாக்க முடியும். கடன் வசதியும், நாமினி வசதியும் இந்த திட்டத்தில் உள்ளன.

PREV
14
போஸ்ட் ஆபிஸ் திட்டம்

பாதுகாப்பான முதலீட்டும் உறுதியான வருமானமும் தேடுபவர்களுக்கு போஸ்ட் ஆபிஸ் ஸ்மால் சேவிங்ஸ் திட்டங்கள் சிறந்த வாய்ப்பு ஆகும். அரசு ஆதரவுடன் இயங்கும் இந்த திட்டங்கள், குறைந்த தொகையிலேயே முதலீடு செய்யும் பழக்கத்தை மக்களிடையே வளர்க்கின்றன. அதில் முக்கியமானது போஸ்ட் ஆபிஸ் ரெக்கரிங் டெப்பாசிட் (RD) திட்டம். தினமும் வெறும் ரூ.333 சேமித்தால், நீண்ட காலத்தில் 17 லட்சம் வரை நிதி உருவாக்க முடியும்.

24
ரூ.333 சேமிப்பில் 10 ஆண்டு 17 லட்சம்

நாள் ஒன்றுக்கு ரூ.333 என்றால், மாதத்திற்கு ரூ.10,000 ஆகும். இதை 5 ஆண்டுகள் தொடர்ந்து செலுத்தினால், மொத்த முதலீடு ரூ.6 லட்சம். வருவாயில் 6.7% வட்டி (காலாண்டு சேர்க்கை) அடிப்படையில் சுமார் ரூ.1.13 லட்சம் வட்டி கிடைக்கும். இதையே மேலும் 5 ஆண்டுகள் நீட்டித்தால், மொத்த முதலீடு ரூ.12 லட்சம் ஆக, வட்டி தொகை ரூ.5.08 லட்சம் வரை உயரும். இவ்வாறு, 10 ஆண்டுகள் கழித்து ரூ.17,08,546 நிதி கிடைக்கும்.

34
ரூ.100 முதலீட்டிலேயே தொடங்கலாம்

இந்த RD திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.100 முதலீட்டிலேயே கணக்கை தொடங்கலாம். மாதந்தோறும் ஒரு நிர்ணய தொகையை செலுத்த வேண்டும். 5 ஆண்டுகள் அடிப்படை காலம், விருப்பப்படி மேலும் 5 ஆண்டுகள் நீட்டிக்கலாம். 3 ஆண்டுகள் கழித்து முன்கூட்டியே முடிக்கும் வசதியும் உள்ளது. நாமினி வசதி இருப்பதால், முதலீட்டாளர் மறைந்தாலும், உரிமையாளர் தொடரவோ, நிதியைப் பெறவோ முடியும்.

44
கடன் வசதியும் உண்டு

ஒரு ஆண்டுக்குப் பிறகு, நீங்கள் சேமித்த தொகையின் 50% வரை கடன் பெறலாம். இதற்கான வட்டி விகிதம், திட்ட வட்டிக்கு கூடுதலாக 2% மட்டுமே. அவசர காலங்களில் இது நிதி உதவியாக இருக்கும். குறைந்தபட்ச சேமிப்பிலேயே பெரிய நிதி உருவாக்க வேண்டும், போஸ்ட் ஆபிஸ் RD திட்டம் பாதுகாப்பானதும் நம்பகமானதுமாகும். தினசரி ரூ.333 சேமிப்பில், உங்கள் எதிர்காலத்தை 17 லட்சம் மதிப்புள்ள நிதியுடன் உறுதி செய்யலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories