செல்போன் தொலைந்தால் அல்லது திருடப்பட்டால், மத்திய அரசின் "சஞ்சார் சாத்தி" செயலி உதவும். இதன் மூலம் போனை செயலிழக்கச் செய்து, அதிகாரிகள் அதை டிரேஸ் செய்து உரிமையாளரிடம் திருப்பிக் கொடுப்பார்கள். மோசடிகளையும் தடுக்க இது உதவுகிறது.
செல்போன் இன்றைய டிஜிட்டல் உலகில் செல்போன் என்பது அன்றாட வாழ்க்கையின் பிரிக்க முடியாத ஒரு அங்கமாக மாறியுள்ளது. அழைப்புகள், சமூக வலைத்தளங்கள், பண பரிவர்த்தனைகள், ஆன்லைன் ஷாப்பிங் என அனைத்திற்கும் நாம் அதிகம் நம்பும் சாதனமாக அது திகழ்கிறது. ஆனால், எதிர்பாராத விதமாக செல்போன் தொலைந்துவிடுதல் அல்லது திருடப்படுதல் பலரின் மனதில் பதற்றத்தையும் இழப்பையும் ஏற்படுத்துகிறது.
25
மத்திய அரசின் பாதுகாப்பு திட்டம்
“சஞ்சார் சாத்தி” இந்த பிரச்சனையை தீர்க்க, மத்திய அரசின் தொலைத்தொடர்பு அமைச்சகம் “சஞ்சார் சாத்தி” (Sanchar Saathi) எனும் இணையதளம் மற்றும் மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலியின் மூலம், செல்போன் தொலைந்துவிட்டால் அல்லது திருடப்பட்டால், அதனை யாரும் பயன்படுத்த முடியாத வகையில் உடனடியாக செயலிழக்க செய்யலாம். பின்னர் அதிகாரிகள் அதனை டிரேஸ் செய்து உரிமையாளரிடம் மீண்டும் கொடுத்து விடுவர்.
35
புகார் அளிக்கும் எளிய முறை
புகார் அளிக்க, உங்களுடைய மொபைல் எண், IMEI எண், தொலைந்த தேதி மற்றும் நேரம், இடம், மற்றும் தனிப்பட்ட தகவல்களை உள்ளிட வேண்டும். இந்த அப்பின் மூலம், உங்களுடைய பெயரில் எத்தனை சிம் கார்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதையும் பார்க்கலாம். அங்கீகாரம் இல்லாமல் உங்களுடைய பெயரில் சிம் கார்டு வாங்கப்பட்டிருந்தால், உடனடியாக புகார் அளித்து அந்த இணைப்பை முடக்க முடியும்.
மோசடிகள் பெரும்பாலும் போலி ஆவணங்களை பயன்படுத்தி பிறரின் பெயரில் சிம் கார்டுகளை வாங்கி குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர். “சஞ்சார் சாத்தி” மூலம், இத்தகைய சந்தேகத்திற்கு இடமான அழைப்புகள், SMS-கள், WhatsApp அழைப்புகள் பற்றியும் புகார் அளிக்கலாம். இதுவரை, இந்த செயலியின் உதவியுடன் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொலைந்த போன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன மற்றும் ஒரு கோடிக்கு மேற்பட்ட அங்கீகரிக்கப்படாத மொபைல் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
55
இனி கவலைக்கு Full Stop
மத்திய அரசு, இந்த அப்பை அனைத்து குடிமக்களும் பயன்படுத்தி, தங்களுடைய மொபைல் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென வலியுறுத்தியுள்ளது. இனி செல்போன் தொலைந்தாலும், கவலைப்பட வேண்டிய அவசியமில்லை – “சஞ்சார் சாத்தி” உங்களுக்காக பாதுகாப்பாக காத்திருக்கிறது.