சம்பளம் வராது, முதலீடுகள் முடங்கும்.. உடனே பான்–ஆதார் லிங்க் செய்யுங்க.. கடைசி தேதி இதான்

Published : Nov 17, 2025, 10:00 AM IST

வரி செலுத்துவோர் உடனே பான்–ஆதார் லிங்க் செய்யுமாறு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். ரூ.1,000 அபராதம் செலுத்தி மீண்டும் இணைக்கலாம், ஆனால் தாமதத்தைத் தவிர்க்க உடனே இணைப்பது நல்லது.

PREV
14
பான்–ஆதார் லிங்க்

பான் கார்டை ஆதார் எண்ணுடன் கட்டாயமாக இணைக்க வேண்டிய கடைசி நாள் டிசம்பர் 31 என வருமானம் வரித் துறை தெரிவித்துள்ளது. இந்த காலக்கெடுவைத் தவறவிட்டால், 2026 ஜனவரி 1 முதல் உங்கள் பான் கார்ட் தானாகவே செயலிழக்கிறது. பான் முடங்குவது ஒரு சின்ன விஷயமில்லை.

வருமானம், முதலீடு, வரி ரிட்டர்ன், சம்பள கணக்கீடு போன்ற அனைத்திலும் நேரடி பாதிப்பை ஏற்படுத்தும் என வரி சேவை தளம் "Taxbuddy" எச்சரித்துள்ளது. வரி நிர்வாகத்தை வெளிப்படையாக்கும் முயற்சியின் பகுதியாகவே இந்த இணைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

24
பான் இணைக்காமல் இருந்தால் என்ன நடக்கும்?

காலக்கெடுவுக்குள் பான்–ஆதார் இணைப்பை செய்யாதவர்கள் 2026 ஜனவரி 1 முதல் பின்வரும் சிக்கல்களை சந்திக்க வேண்டி வரும்:

ஐடிஆர் தாக்கல் செய்ய முடியாது.

  • தாக்கல் செய்யப்பட்ட பழைய ரிட்டர்ன்களின் ரீஃபண்ட் மற்றும் செயலாக்கம் நிறுத்தப்படும்.
  • வங்கி பரிவர்த்தனைகள், முதலீடுகள், எஸ்.ஐ.பி.கள் ஆகியவை நீண்ட காலத்திற்கு முடங்கலாம்.
  • பங்குச் சந்தை வர்த்தகம், மியூச்சுவல் ஃபண்ட், KYC அப்டேட்கள் செய்ய முடியாது.
  • அதிக விகிதத்தில் TDS/TCS விதிப்பு நடைமுறைக்கு வரும்.
34
அபராதம் கட்ட வேண்டும்

பான் செயலிழந்தாலும் உங்களுக்கு ஏற்கனவே திறந்துள்ள வங்கி கணக்குகள், பழைய முதலீடுகள் தொடரும். ஆனால் புதிய முதலீடுகள், SIP தொடங்குவது, நிறுத்துவது, பங்கு வாங்குவது/விற்கு வருவது அனைத்தும் நிறுத்தப்படும். டிசம்பர் 31-க்குப் பிறகு இணைக்க நினைத்தால் கூட முடியும்.

ஆனால் ரூ.1,000 அபராதம் கட்ட வேண்டும். இணைப்பு செய்யப்பட்ட 30 நாட்களுக்குள் உங்கள் பான் மீண்டும் செயல்பாட்டுக்கு வரும். அதுவரை நிதி பரிவர்த்தனைகள் ஸ்தம்பித்துவிடும் என்பதால், கடைசி நிமிடத்துக்கு காத்திருக்காமல் உடனே இணைப்பது பாதுகாப்பானது.

44
பான்–ஆதார் இணைப்பு செய்யும் எளிய நடைமுறை

பான்-ஆதார் இணைப்பைச் செய்வது மிகவும் எளிது:

1. வருமான வரித் துறையின் இணையதளத்திற்குச் செல்லவும்: incometax.gov.in

2. முகப்புப் பக்கத்தில் ‘லிங்க் ஆதார்’ விருப்பத்தைத் தேர்வு செய்யவும்

3. உங்கள் PAN எண் மற்றும் ஆதார் எண்ணை உள்ளிடவும்

4. சரிபார்த்து ‘Validate’ பொத்தானை அழுத்தி செயல்முறையை முடிக்கவும்

Read more Photos on
click me!

Recommended Stories