சென்னையில் திங்களன்று ஆபரணத் தங்கம் வெள்ளியின் விலை குறைந்துள்ளது. சர்வதேச முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் மீண்டும் முதலீடு செய்வதால் விலை சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், இது திருமண ஏற்பாடுகளை செய்பவர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
வாரத்தின் முதல் வர்த்தக நாளான திங்கள் காலை தினத்திலே சென்னையில் ஆபரண தங்கம் மற்றும் வெள்ளி விலை இல்லத்தரசிகளை மகிழ்ச்சியுடன் நகை கடைகளைக் கிளம்ப செய்துள்ளது. தங்கம் விலை குறைந்தள்ளதால் திருமண ஏற்பாடுகளை முன்னெடுத்து கொண்டிருக்கும் குடும்பங்கள் சந்தோஷத்துடன் நகை கடைகளில் குவிந்து வருகின்றனர்.
23
ஆபரணத்தங்கத்தின் விலை சரிவு.!
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ரூ.11540 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத்தங்கம் 80 ரூபாய் குறைந்து 92,320 ரூபாயாக உள்ளது. சர்வதேச முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய தொடங்கியதே இதற்கு காரணமாக தங்க நகை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல் வெள்ளியின் விலை கிராம் 173 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இது நேற்றைய விலையை விட 2 ரூபாய் குறைவாகும். ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 73 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது
33
விலை மேலும் குறையலாம்
சர்வதேச முதலீட்டாளர்கள் பங்கு சந்தையில் மீண்டும் அதிகபட்சம் ஈடுபட ஆரம்பித்திருக்கிறார்கள் என்றும் அமெரிக்க வரி விதிப்புகள் மற்றும் சர்வதேச பொருளாதார நிலவரத்தின் காரணத்தினால் பணம் பங்குச் சந்தை மற்றும் இன்வெஸ்ட்மென்டுகளுக்கு திரும்பி வருவதால் பலர் தங்கம் போன்ற திட்டமிட்ட உலோகங்களிலிருந்து தற்காலிகமாக மீறிவிட்டு பங்குகளை தேர்ந்தெடுக்கிறார்கள் எனவும் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தங்கம் விலை மேலும் குறையும் என்பதை தங்க நகை வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர். திருமண ஏற்பாடுகளை முடிப்பவர்களுக்கு இச்சரிவு ஒரு சந்தோஷமாய் மாறியுள்ளது. இன்று வாங்கினால்தான் நன்மை என்ற எண்ணத்தோடு தாய்குலங்கள் நகை கடைகளுக்குச் செல்லும் காட்சி பரவலாக காணப்படுகிறது.