மாதம் ₹25,000 சம்பளம் பெறுபவர்கள் கூட, 25 வயதில் முதலீட்டைத் தொடங்கினால் கூட்டு வட்டியின் மூலம் பெரிய நிதியை உருவாக்க முடியும். ₹1.5 கோடி கார்பஸ் சேர்த்து, ஓய்வுக்குப் பின் மாதம் ₹1 லட்சம் வருமானம் பெறலாம்.
ஒருவருக்கு பொதுவாக 25 வயதில் வேலை கிடைக்கிறது. இதில் பலரும் “முதலில் செலவுகள் செட்டாகட்டும்… அப்புறம் முதலீடு பார்க்கலாம்” என்றுதான் பலரும் நினைப்பார்கள். ஆனால் உண்மையில் முதலீட்டை தொடங்க இதுவே சரியான நேரம். காரணம் ஒரே ஒன்று தான், கூட்டு வட்டி. நீங்கள் முதலீடு செய்யும் பணத்திற்கு மட்டும் லாபம் கிடைப்பதில்லை. அந்த லாபத்தின் மீதும் மீண்டும் லாபம் சேர்ந்து, காலப்போக்கில் பணம் வேகமாக பெருக்கி விடுகிறது. மாதம் ரூ.25,000 சம்பளம் என்றாலும், சிறிய தொகையில் தொடங்கினால் கூட எதிர்காலத்தில் பெரிய தொகையை உருவாக்க முடியும். 25 வயதில் தொடங்கி 50 வயது வரை உங்களிடம் மொத்தம் 25 ஆண்டுகள் இருக்கிறது.
25
1.5 கோடி SIP திட்டம்
இந்த நீண்ட காலம் தான் உங்களுக்கான பெரிய பலம். சந்தையில் சில ஆண்டுகள் உயர்வும், சில ஆண்டுகள் சரிவும் வரும். ஆனால் நீண்ட காலத்தில் பார்த்தால், நல்ல வருமானம் கிடைக்கும் வாய்ப்பு அதிகம். அதற்காக ஒரே தடவை பெரிய தொகையை முதலீடு செய்ய வேண்டியதில்லை. எஸ்ஐபி (மாதாந்திர முதலீடு) போன்ற முறைகள் மூலம் ஒழுங்காக முதலீடு செய்தால், சந்தை சரிந்த காலத்திலும் குறைந்த விலையில் அதிக யூனிட்கள் வாங்க முடியும். அந்த யூனிட்கள் தான் மார்க்கெட் உயரும்போது உங்களுக்கு பெரிய லாபம் தரும்.
35
ஓய்வு கார்பஸ்
இப்போதே திட்டமிட்டால், 50 வயதில் ஒரு பெரிய தொகையை கார்பஸ் ஆக உருவாக்க முடியும். தாமதித்தால், அதே இலக்கை அடைய மாதம் அதிக தொகை போட வேண்டியிருக்கும். அதனால் இளம் வயது என்பது ஒரு “சிறிய காசு, பெரிய விளைவு” கிடைக்கும் நேரம். 50 வயதுக்குப் பிறகு மாதம் ரூ.1 லட்சம் வருமானம் வேண்டும் என்றால், ஆண்டுக்கு ரூ.12 லட்சம் தேவை. இதற்கு SWP (Systematic Withdrawal Plan) எனும் வழி உதவுகிறது. அதாவது நீங்கள் உருவாக்கிய முதலீட்டுத் தொகையிலிருந்து ஒவ்வொரு மாதமும் ஒரு நிர்ணயத் தொகையை எடுத்துக்கொண்டு வாழ்க்கைச் செலவுக்கு பயன்படுத்தப்படுகிறது.
பொதுவாக ஓய்வுக்குப் பிறகு பாதுகாப்பாக இருக்க, ஆண்டுக்கு 8% அளவுக்கு மட்டும் பணம் எடுத்தால் நல்லது என்று நிதி ஆலோசகர்கள் சொல்வார்கள். அந்த கணக்கில் ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வருமானம் பெற, குறைந்தபட்சம் ரூ.1.5 கோடி கார்பஸ் இருந்தால் போதும். மியூச்சுவல் ஃபண்ட் நீண்ட காலத்தில் சராசரியாக 10% முதல் 12% வரை வளர்ச்சியைத் தரும், நீங்கள் 8% எடுத்தாலும் தொகை தொடர்ந்து வளரும் வாய்ப்பு உள்ளது. இதனால் கார்பஸ் சீக்கிரம் காலியாகாமல், ஒரு "நிலையான ஓய்வூதிய வருமானம்" மாதிரி உருவாகும்.
55
கூட்டு வட்டி
அப்படியானால் ரூ.1.5 கோடி அடைய மாதம் எவ்வளவு எஸ்ஐபி தேவை? 25 ஆண்டுகள் முதலீட்டு காலம், ஆண்டுக்கு 12% வருமானம் என வைத்தால், கால்குலேட்டர் கணக்கில் சுமார் ரூ.8,000 எஸ்ஐபி செய்தால் அந்த இலக்கை அணுகலாம். பாதுகாப்புக்காக ரூ.2 கோடியை இலக்காக வைத்தால் மாதம் சுமார் ரூ.10,500 எஸ்ஐபி தேவை. ஆனால் சம்பளம் ரூ.25,000 என்றால் ரூ.8,000 உடனே கடினமாகத் தோன்றலாம். அதனால் முதலில் ரூ.5,000-ல் தொடங்கி, சம்பளம் அதிகரிக்கும் ஒவ்வொரு முறையும் எஸ்ஐபி-யை 10% அளவில் உயர்த்தும் “டாப்-அப்” முறையைப் பின்பற்றலாம். முக்கியமான விஷயம்: சந்தை சரிந்தால் பயப்படாமல், எஸ்ஐபி-ஐ நிறுத்தாமல் தொடர வேண்டும். இப்படி ஒழுக்கமாக முதலீடு செய்தால், 50 வயதில் மாதம் ரூ.1 லட்சம் வருமானம் நிச்சயம் சாத்தியமான ஒன்றாக மாறும். இது பொதுவான தகவலுக்காக மட்டும். முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. முதலீடு செய்யும்முன் நிதி ஆலோசகரின் ஆலோசனை பெறுவது நல்லது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.