தமிழ்நாட்டில் புதிய பிசினஸ் ட்ரெண்ட் இதுதான்.. இந்த மார்க்கெட்டிங் பற்றி தான் ஊர் முழுக்க பேச்சு

Published : Jan 22, 2026, 11:26 AM IST

ஹைப்பர்லோகல் மார்க்கெட்டிங் என்பது, குறைந்த செலவில் உள்ளூர் இன்ஃப்ளூயன்சர்களைப் பயன்படுத்தி சிறு வணிகங்களை விளம்பரப்படுத்தும் ஒரு முறையாகும். இது இன்ஃப்ளூயன்சர்களையும் வணிகங்களையும் இணைக்கும் ஒரு புதிய தொழில் வாய்ப்பையும் வழங்குகிறது.

PREV
15
ஹைப்பர்லோகல் மார்க்கெட்டிங்

இன்றைக்கு பிராண்ட் விளம்பரம் என்றாலே நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள், தேசிய அளவிலான பிரபலங்கள் தான் உடனே நினைவுக்கு வரும். ஆனால் அவர்களை வைத்து ஒரு விளம்பரம் செய்யவே பெரிய செலவு ஆகும். இந்த மாதிரி செலவுகளை சிறு கடை, சிறு நிறுவனங்கள் சுமக்க முடியாது. இங்கேதான் ஹைப்பர்லோகல் பிராண்ட் விளம்பர மாடல் முக்கியமானது. ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள மக்களிடம் தாக்கம் கொண்ட உள்ளூர் இன்ஃப்ளூயன்சர்கள் மூலமாக அந்த பகுதி வணிகங்களை விளம்பரப்படுத்துவது தான் இதன் அடிப்படை ஐடியா.

25
உள்ளூர் இன்ஃப்ளூயன்சர் விளம்பரம்

ஒவ்வொரு பகுதியிலும் யூடியூப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் பிரபலமான நபர்கள் இருப்பார்கள். அவர்களை அந்த பகுதி மக்கள் நமக்கே தெரிந்தவர் போலவே பார்க்கிறார்கள். அதனால்தான் பெரிய பிரபலங்களின் விளம்பரத்தை விட, உள்ளூர் நபரின் பரிந்துரை அதிக நம்பிக்கையைக் கொடுக்கும். தினமும் முகம் பார்க்கும், நெருக்கமான மொழி, பகுதி சார்ந்த பேச்சு எல்லாம் சேர்ந்து இந்த விளம்பரத்திற்கு மிகப்பெரிய பவராக மாறுகிறது என்று கூறலாம்.

35
உள்ளூர் பிராண்ட் விளம்பர வணிகம்

இந்த வணிகத்தில் உங்கள் வேலையே பாலம் போல செயல்படுவது. பல பகுதிகளில் இருக்கும் உள்ளூர் செல்வாக்குள்ள நபர்களை அணுகி, அவர்களின் விவரங்கள், பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை, அவர்களின் ஸ்டைல், ரசிகர்கள் வகை ஆகியவற்றை சேகரிக்க வேண்டும். இதை ஒரு நெட்வொர்க் அல்லது பட்டியல் ஆக தயார் செய்தால், வணிகர்களுக்கு ஒரே இடத்தில் பல தேர்வுகள் கிடைக்கும். இதனால் உங்களுக்கு நம்பகமான ஒரு லோகல் மார்க்கெட்டிங் பிளாட்ஃபாரம் உருவாகும்.

45
குறைந்த செலவு மார்க்கெட்டிங்

இதற்கு பெரிய ஆபீஸ் தேவையில்லை. அதிக முதலீடு வேண்டாம். ஒரு மொபைல் போன் இருந்தாலே ஆரம்பிக்கலாம். முதலில் இன்ஃப்ளூயன்சர்களிடம் கால் அல்லது மெசேஜ் மூலம் பேசுங்கள். அடுத்து அருகில் இருக்கும் கடைகள், டிபன் சென்டர், ஸ்டோர், ஜிம், கிளினிக் போன்ற வணிகங்களிடம் நேரடியாக சென்று, குறைந்த செலவில் ரீல்/வீடியோ விளம்பரம் செய்யலாம் என்று விளக்குங்கள். ஆரம்பத்தில் சின்ன அளவில் செய்து, ரிசல்ட் வந்ததும் அதை வைத்து பெரிய கிளைண்டுகளை பிடிக்கலாம்.

55
இன்ஸ்டா ரீல்ஸ் மார்க்கெட்டிங்

வருமானம் வரும் வழியும் இரண்டு பக்கமாக இருக்கும். இன்ஃப்ளூயன்சரிடம் இருந்து ஒரு கமிஷன் வாங்கலாம். அதேபோல வணிகரிடமிருந்து சேவை கட்டணமும் வசூலிக்கலாம். ஒரு வீடியோவுக்கே டபுள் இன்கம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. ஒரே பகுதியில் அதிக வணிகங்கள் மற்றும் அதிக இன்ஃப்ளூயன்சர்கள் இணைந்தால், வருமானம் தொடர்ந்து வளர வாய்ப்பு அதிகம். சரியாக திட்டமிட்டு நடத்தினால், நீண்ட காலத்திற்கு ஒரு வலுவான உள்ளூர் விளம்பர நெட்வொர்க் உருவாக்கலாம். எந்த தொழிலை தொடங்குவதற்கு முன் உங்கள் செலவு-வருமான திட்டத்தை சரியாக கணக்கிட்டு, தேவையெனில் நிதி ஆலோசனை பெறுவது நல்லது ஆகும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories