ரூ. 75 நாணயத்தில் அப்படி என்ன சிறப்பு இருக்கு - எங்கெல்லாம் கிடைக்கும்?

First Published May 27, 2023, 3:33 PM IST

புதிய நாடாளுமன்றக் கட்டட திறப்பு விழாவையொட்டி, அந்தக் கட்டட உருவம் பொறிக்கப்பட்ட 75 ரூபாய் சிறப்பு நாணயத்தை மத்திய அரசு வெளியிட உள்ளது.

டெல்லியில் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (மே 28) திறந்து வைக்க உள்ளாா். இதைக் குறிக்கும் வகையில், 75 ரூபாய் சிறப்பு நாணயம் வெளியிடப்படவுள்ளதாக, மத்திய நிதியமைச்சகத்தின்கீழ் செயல்படும் பொருளாதார விவகாரங்கள் துறை அறிவிப்பு வெளியிட்டது.

சுமாா் 35 கிராம் எடையுள்ள அந்த நாணயத்தின் ஒரு பக்கத்தின் நடுவில், அசோகத் தூணில் சிங்கத் தலைகள் சின்னம் இடம்பெறும். இருபுறமும் 'பாரத்' என தேவநாகரி எழுத்து வடிவிலும், இந்தியா என ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருக்கும்.

இதன் கீழே, ரூபாய் சின்னத்துடன் '75' எண் இடம்பெற்றிருக்கும். மற்றொரு பக்கத்தில், புதிய நாடாளுமன்றக் கட்டட உருவம் பொறிக்கப்பட்டு, நடப்பாண்டை குறிக்கும் வகையில் '2023' எண் இடம்பெறும். இந்தியச் சுதந்திரத்தின் 75-ஆவது ஆண்டு கொண்டாடப்பட்டு வரும் நிலையில், புதிய நாடாளுமன்றக் கட்டடம் திறக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

தங்கம் மற்றும் வெள்ளி போன்ற விலைமதிப்பற்ற உலோகங்களைக் கொண்ட உயர் மதிப்புகளைக் கொண்ட நினைவு நாணயங்கள் பெரும்பாலும் சட்டப் பணமாக கிடைக்காமல் சேகரிக்கக்கூடியதாக வெளியிடப்படுகின்றன. மாறாக, குறைந்த விலையுள்ள நினைவு நாணயங்கள் பொதுவாக ஒரு குறுகிய காலத்திற்கு மட்டுமே புழக்கத்தில் இருக்கும்.

நினைவு நாணயங்களை சேகரிப்பதில் ஆர்வமுள்ளவர்கள் குறிப்பிட்ட ஏஜென்சிகளிடம் இருந்து அவற்றை வாங்கலாம். ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வைக் குறிக்கும் வகையில் ரூ.75 நாணயம் வெளியிடப்படுவது இது முதல் முறையல்ல. உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் (FAO) 75வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், 2020 அக்டோபரில் ரூ.75 நாணயம் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க..ஜூன் மாதத்தில் 12 நாட்கள் வங்கி விடுமுறை.. தமிழகத்தில் எத்தனை நாள் தெரியுமா?

click me!