ஆபத்து காலங்களில் அடகு வைப்பதற்கும் தங்க நகைகள் உபயோகமாக இருப்பதும் இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், நகை வாங்குவோரின் ஆர்வம் மட்டும் குறையவில்லை.
தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாகாவே விலை அதிகரித்து வந்தது. இதற்கிடையில் வாரத்தில் ஒரு சில நாட்களில் விலை குறைவதும் ஏறுவதுமாக உள்ளது. தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்தது.
நேற்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.45,000 ஆகவும், 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.5,625 ஆகவும் விற்பனையானது.