வாடிக்கையாளர்களுக்கு அல்வா கொடுத்த அம்பானி! குறைந்தபட்ச ரீசார்ஜ் கட்டணத்தை ரூ.50 உயர்த்திய Jio

Published : Aug 19, 2025, 10:17 AM IST

Jio தனது ரூ.249 மாதாந்திர ரீசார்ஜ் திட்டத்தை நிறுத்திவிட்டது, இதனால் குறைந்தபட்ச மாதாந்திர திட்டம் ரூ.299 ஆக உயர்ந்துள்ளது. இது குறைந்த விலை திட்டத்தை பயன்படுத்தி வந்த பயனர்களுக்கு கூடுதல் செலவை ஏற்படுத்துகிறது.

PREV
15
அடித்தட்டு மக்களுக்கு அல்வா கொடுத்த அம்பானி.!

Reliance Jio நிறுவனம் தனது குறைந்த விலையிலான மாதாந்திர ரீசார்ஜ் திட்டங்களை நிறுத்தி விட்டது. இதுவரை, மாதத்திற்கு ரூ.249 ப்ளான் (1GB/Day – 28 நாட்கள்) தான் குறைந்தபட்சமாக இருந்தது. ஆனால், சமீபத்தில் அந்த திட்டம் நீக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது கிடைக்கும் குறைந்தபட்ச மாதாந்திர ப்ளான் ரூ.299 ஆகும். இதில் 1.5GB தரவு தினசரி வழங்கப்படுகிறது.

25
இனிமேல் மினிமம் ரூ.299.!

இந்த மாற்றத்தால் Jio பயனாளர்கள் அனைவரும் குறைந்தபட்சம் ரூ.299 செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, குறைந்த விலை திட்டத்தை பயன்படுத்தி வந்த மாணவர்கள், ஊரக வாடிக்கையாளர்கள் மற்றும் குறைந்த அளவு டேட்டாவே தேவையானவர்கள் கூடுதல் செலவினைச் செய்ய வேண்டியிருக்கிறது.

35
ஏர்டெல், வோடாபோன் விலையில் தற்போது ஜியோ.!

இந்த நடவடிக்கையால் Jioவின் சராசரி வருவாய் (ARPU) அதிகரிக்கும். அதே சமயம், Airtel, Vodafone Idea போன்ற நிறுவனங்களும் ஏற்கனவே ரூ.299 ப்ளானையே அடிப்படையாக வைத்துள்ளதால், Jioவும் போட்டியாளர்களுடன் விலை ஒத்துழைப்பை நோக்கமாக கொண்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

45
அடித்தட்டு மக்கள் மீது கையை வைத்த ஜியோ.!

ஆனால், சாதாரண வாடிக்கையாளர்களுக்கு இது சிரமத்தை ஏற்படுத்துகிறது. ஏற்கனவே தினசரி 1GB திட்டம் போதுமானதாக இருந்தவர்களுக்கு இப்போது அதிக செலவு, தேவையில்லாத கூடுதல் டேட்டா ஆகியவை திணிக்கப்படுகின்றன. சமூக வலைதளங்களிலும் இதை விமர்சிக்கும் குரல்கள் அதிகரித்துள்ளன.

55
மாதாந்திர ரீஜார்ஜ் பட்ஜெட்டுக்கு கூடுதல் தொகை

மொத்தத்தில் பார்க்கும்போது, Jioவின் புதிய மாற்றம் நிறுவனத்திற்கு நன்மை செய்தாலும், வாடிக்கையாளர்கள் குறிப்பாக செலவைக் குறைத்து பயன்படுத்த விரும்புவோருக்கு சுமையாகவே மாறியுள்ளது. அதேசமயம், இந்திய தொலைத்தொடர்பு துறையில் விலை நிலைத்தன்மை மற்றும் வருவாய் உயர்வு என்பதில் இது ஒரு முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories