Gold Rate Today (August 19): காலையிலேயே வந்த நல்ல செய்தி.! தங்கம் விலை அதிரடி சரிவு.! நகை கடைகளில் கூட்டமோ கூட்டம்.!

Published : Aug 19, 2025, 09:49 AM IST

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து, சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. வெள்ளி விலையும் சிறிது குறைந்துள்ளதால், நகை வாங்க திட்டமிடுபவர்களுக்கு இது சாதகமான சூழல்.

PREV
13
காலையிலேயே கிடைத்த சந்தோஷ செய்தி.!

அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்களுக்கு இன்று காலையிலேயே நல்ல செய்தி கிடைத்துள்ளது. வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய் கிழமை சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. ஆபரண தங்கம் விலை குறைந்துள்ளதால் திருமண ஏற்பாடு செய்துள்ளவர்கள் மகிழ்ச்சியுடன் நகை கடைக்கு சென்று வருகின்றனர். அதேபோல் வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.1 வரை சரிவடைந்துள்ளது. இதனால் அடித்தட்டு மக்களும் நடுத்தர வர்க்கத்தினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

23
தங்கம், வெள்ளி விலை அதிரடி சரிவு

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து ரூ,9235க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத்தங்கம் 320 ரூபாய் குறைந்து 73,880 ரூபாயாக உள்ளது. சர்வதேச முதலீட்டாளர்கள் பங்கச்சந்தையில் முதலீடு செய்ய தொடங்கியதே இதற்கு காரணமாக தங்க நகை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல் வெள்ளியின் விலை கிராம் 126 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இது நேற்றைய விலையை விட 1 ரூபாய் குறைவாகும். ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 26 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

33
தங்கம் விலை மேலும் குறைய வாய்ப்பு.!

அமெரிக்கவின் வரி விதிப்பு, சர்வதேச பொருளாதார நிலவரங்கள் ஆகியவை முதலீட்டாளர்களை பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் ஆர்வத்தை தூண்டியதால் அவர்கள் உலோகங்களை தவிர்த்து சந்தையில் முதலீடுகளை அதிகரித்து வருகின்றனர். இது வரும் வாரத்திலும தொடரும் என்பதால் தங்கம் விலை மேலும் சரியும் என தங்க நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories