Joint Account: இதை தெரிஞ்சுக்காட்டி வருமானவரி நோட்டீஸ் வரும்.! ஜாக்கிரதை.!

Published : Aug 19, 2025, 08:21 AM IST

இணை வங்கி கணக்குகள் குடும்ப நிதி மேலாண்மைக்கு உதவினாலும், வருமான வரி விதிகளைப் புரிந்து கொள்வது அவசியம். TDS, AIS மற்றும் Clubbing Provisions போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தினால், இணை கணக்குகள் நல்ல பலன் தரும்.

PREV
17
Joint Bank Account : நல்லதா?!

இன்றைய காலத்தில் பலரும் இணை வங்கி கணக்குகளை (Joint Bank Account) திறந்து வைத்துக் கொள்கிறார்கள். கணவன்–மனைவி, பெற்றோர்–மகன், சகோதரர்–சகோதரி என பல்வேறு வகையில் இது பயன்படுகிறது. குடும்ப செலவுகள், சேமிப்புகள் மற்றும் முதலீடுகளை எளிதில் நிர்வகிக்க இணை கணக்குகள் மிகவும் உதவுகின்றன. ஆனால், இவற்றை தவறாகப் பயன்படுத்தினால் வருமான வரி (Income Tax) தொடர்பான சிக்கல்கள் வரும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும்.

27
TDS யாரின் பெயரில் வரும்?

இணை கணக்கில் FD (Fixed Deposit) அல்லது சேமிப்பு வட்டி வந்தால், வங்கி TDS (Tax Deducted at Source) ஐ முதன்மை (Primary) கணக்கு வைத்திருப்பவரின் PAN-இல் குறைக்கும். உதாரணமாக, மனைவி வேலை செய்யாமல் இருந்தாலும் கணவன் சம்பாதித்த பணத்தை வைத்து FD செய்தால், வங்கி TDS-ஐ மனைவியின் PAN-இல் காட்டிவிடும். ஆனால் சட்டப்படி அந்த வருமானம் சம்பாதித்தவரின் பெயரில் சேர்த்து வரி விதிக்கப்பட வேண்டும். எனவே, வங்கியில் கணக்கு தொடங்கும் போதே, TDS சம்பாதிப்பவரின் PAN-இல் பதிவு செய்யுமாறு தெரிவிக்க வேண்டும்.

37
AIS-ல் (Annual Information Statement) தவறான பதிவு

பலர் கவனிக்காத ஒன்று – AIS-ல் வட்டி வருமானம் தவறானவரின் பெயரில் பதிவாகி விடுகிறது. உதாரணமாக, தந்தை FD செய்தாலும், மகன் பெயரில் வட்டி காட்டப்படலாம். இப்படி இருந்தால், மகன் வருமான வரி தாக்கல் செய்யும் போது “This income is not taxable in my hands” என்று சரியாக குறிப்பிட வேண்டும். இல்லையெனில் வரித்துறை விசாரணைக்கு அழைக்கலாம்.

47
Clubbing Provisions – வருமானம் யாரிடம் சேரும்?

இந்திய வரி சட்டத்தில் "Clubbing of Income" என்ற ஒரு விதி உள்ளது. அதன்படி, கணவன் சம்பாதித்த பணத்தை மனைவிக்கு கொடுத்து அதனால் FD செய்தால், அதிலிருந்து வரும் வட்டி வருமானம் மீண்டும் கணவனின் வருமானத்தில் சேர்க்கப்படும். அதேபோல், பெற்றோர் குழந்தைகளின் பெயரில் FD செய்தாலும், சிறுவன்/சிறுமி 18 வயது அடையவில்லை என்றால், அந்த வட்டி பெற்றோரின் வருமானத்தில் சேர்க்கப்படும். ஆனால், சகோதரர்–சகோதரி இடையே பரிசாக கொடுத்தால் இந்த விதி பொருந்தாது.

57
பணம் யார் செலுத்தினார் என்பதுதான் முக்கியம்

இணை கணக்கில் இருவரும் வேலை பார்த்து சம்பாதித்த பணம் சேர்த்தால், யார் எவ்வளவு செலுத்தினார் என்பதற்கேற்ப வட்டி வருமானம் பங்கிடப்படும். உதாரணமாக, கணவன் 60% தொகையும் மனைவி 40% தொகையும் செலுத்தினால், வட்டி வருமானமும் அதே விகிதத்தில் பங்கிட வேண்டும்.

67
கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்
  • கணக்கைத் தொடங்கும் போதே PAN விபரங்களை சரியாக வங்கியில் புதுப்பிக்க வேண்டும்.
  • FD அல்லது சேமிப்பு வட்டி வருமானம் எவரது வரி கணக்கில் சேரும் என்பதை தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.
  • AIS-ஐ வருடம் தோறும் சரிபார்த்து, தவறுகள் இருந்தால் உடனடியாக திருத்திக் கொள்ள வேண்டும்.
  • பெரிய தொகை பரிமாற்றங்கள் நடந்தால், அதற்கான ஆதாரம் (பரிசு ஒப்பந்தம், bank transfer details) வைத்திருக்க வேண்டும்.
77
இதையும் கவனத்தில் கொண்டால் நல்லது.!

இணை வங்கி கணக்குகள் நம் வாழ்க்கையை எளிமையாக்கினாலும், வரி விதிகளில் தெளிவான புரிதல் இல்லையெனில் சிக்கல்கள் ஏற்படும். குறிப்பாக கணவன்–மனைவி, பெற்றோர்–குழந்தைகள் ஆகியோரின் சேமிப்புகளில் clubbing rule பெரும்பாலும் பொருந்தும். எனவே, நிதி திட்டமிடல் செய்யும்போது வரி நிபுணரிடம் ஆலோசனை பெற்று, PAN, TDS, AIS அனைத்தும் சரியாக உள்ளதா என்று சரிபார்த்து வைத்தால், இணை கணக்குகள் நம் குடும்பத்திற்கு நல்ல பலன் தரும்.

Read more Photos on
click me!

Recommended Stories