இந்தியாவுக்கு கிடைத்த‌ 'மெகா' தங்கப் புதையல்! மொத்தம் 20 டன்! தோண்டத் தோண்ட வெளிவரும் தங்கம்!

Published : Aug 18, 2025, 09:43 PM IST

இந்தியாவுக்கு ஜாக்பாட் அளிக்கும் விதமாக ஒடிசாவில் 20 டன் கொண்ட மிகப்பெரிய தங்கப் புதையல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

PREV
14
Gold Treasure Discovered In Odisha

அமெரிக்கா, சீனா, ரஷ்யா போன்ற பெரிய நாடுகளுக்கு போட்டியளிக்கும் விதமாக வேகமாக வளர்ந்து வரும் இந்தியாவுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் அடித்துள்ளது. ஆம்.. மிகப்பெரிய தங்கப் புதையல் ஒன்றை இந்தியா கண்டறிந்துள்ளது. அதாவது ஒடிசா மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் சுமார் 10 முதல் 20 மெட்ரிக் டன் தங்க இருப்பு இருக்கலாம் என இந்திய புவியியல் ஆய்வு மையம் (GSI) நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

24
ஒடிசாவில் மிகப்பெரிய தங்கப் புதையல்

ஒடிசாவில் கனிமவள தாதுவுக்கான ஆய்வு நடந்தபோது தியோகர் (அடாசா-ராம்பள்ளி), சுந்தர்கர், நபரங்பூர், கியோஞ்சர், அங்குல் மற்றும் கோராபுட் ஆகிய இடங்களில் தங்கப் படிவுகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் மயூர்பஞ்ச், மல்காங்கிரி, சம்பல்பூர் மற்றும் பவுத் போன்ற மாவட்டங்களிலும் பூமிக்கு அடியில் தங்கம் இருக்கிறதா? என ஆய்வுகள் நடந்து வருகின்றன. இதனால் ஒடிசா தங்கச் சுரங்கத்திற்கான ஒரு புதிய மையமாக உருவெடுத்துள்ளது.

34
20 டன் தங்கம் கண்டுபிடிப்பு

ஒடிசாவில் தங்க இருப்பு குறித்து அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் எதுவும் இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனாலும் இந்திய புவியியல் ஆய்வு மையம் குறிகாட்டிகளின் அடிப்படையில் ஒடிசாவில் பூமிக்கு அடியில் சுமார் 10 முதல் 20 மெட்ரிக் டன்கள் வரை தங்கம் இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர். ஒடிசாவில் கண்டுபிடிக்கப்பட்ட மெகா தங்கப் புதையல் இந்தியாவின் தங்க உற்பத்தியை கணிசமாக அதிகரிக்கும்.

தங்கத்தை அதிகம் இறக்குமதி செய்யும் இந்தியா

உலகளவில் தங்கத்தை அதிகமாக பயன்படுத்தும் நாடுகளின் வரிசையில் இந்தியா முன்னிலையில் உள்ளதால் தேவையை பூர்த்தி செய்ய வெளிநாடுகளில் இருந்து தங்கத்தை அதிகளவில் இறக்குமதி செய்து வருகிறது. உள்நாட்டில் தங்கம் உற்பத்தி மிகக்குறைவாக உள்ளதால் கடந்த ஆன்டில் மட்டும் சுமார் 700 முதல் 800 மெட்ரிக் டன் தங்கத்தை இந்தியா இறக்குமதி செய்தது. அதே வேளையில் உள்நாட்டு தங்க உற்பத்தி ஆண்டுக்கு 1.4 மெட்ரிக் டன் என்ற அளவில் மிகக்குறைவாக உள்ளது.

44
இந்தியாவின் தங்க கையிருப்பு உயரும்

ஒடிசாவில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கப் புதையல் இந்தியாவின் இறக்குமதி அளவை மாற்றாது என்றாலும், இந்தியாவின் உள்நாட்டு தங்க உற்பத்தியை கணிசமாக அதிகரிக்கும். இதுமட்டுமின்றி ஒடிசாவின் தங்கச் சுரங்கங்கள் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தை அதிகரிக்கும். மேலும் ஒடிசாவின் பொருளாதாரம் மேம்படும். மிக முக்கியமாக இந்தியாவின் தங்க கையிருப்பு கணிசமாக உயரும்.

Read more Photos on
click me!

Recommended Stories