
குருவி சேரப்பது போல் காசு சேர்த்து அதனை ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் சில விஷயங்களை கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும்.ரியல் எஸ்டேட் சொத்துகளில் நீண்ட காலத்தில் மிக அதிக லாபத்தைக் கொடுத்து வருவதில் வீட்டு மனை (Housing Plot) முதலீடு முதல் இடத்தில் இருக்கிறது. நகரம் விரிவடையும்போது, அதன் ஒரு பகுதி வளர்ச்சி அடையும் போது, வீட்டு மனைக்கான தேவை மிகவும் உயர்கிறது. அப்போது நல்ல விலை கிடைக் கிறது. ஆனால், ஒரு நல்ல விலை கிடைக்க குறைந்தது 20, 30 ஆண்டுகள் பொறுமையாகக் காத்திருக்க வேண்டும்.
ஒரு ரியல் எஸ்டேட் சொத்து பிரதான இடத்தில், போக்குவரத்து வசதிகள் நிறைந்த இடத்தில் இருந்தால் அதிக விலை இருக்கும். மனை ஒரு முட்டு சந்தாகவோ, உயர் மின்சார வயர்கள் செல்லும் பகுதியின் கீழோ, அருகிலோ இருந்தாலோ, சாக்கடை, சுடுகாடு போன்றவற்றின் அருகில் இருந்தாலோ அதிக விலை போக வாய்ப்பில்லை.மனை, வீடு, கட்டங்கள் அரசு அங்கீகாரத்துடன் கட்டப்பட்டிருந்தால் கடன் சுலபமாக கிடைக்கும். மேலும், நல்ல விலைக்கும் போகும். அங்கிகாரம் பெற்ற மனைகளை விசாரித்து வாங்குவதே நல்லது. குறைந்த விலை என்ற மோகத்தில் சிக்கி அங்கிகாரம் இல்லாத மனைகளை வாங்கினால் சிரமத்திற்கு உள்ளாக வேண்டி வரும்
இடமோ, வீடோ அமைந்திருக்கும் இடத்திற்கு செல்ல சாலை வசதி முக்கியம். ரியல் எஸ்டேட் சொத்து அமைந்திருக்கும் சாலையின் அகலம் 20 அடிக்கு மேல் இருக்கும் பட்சத்தில்தான் நல்ல விலைக்குப் போகும். 24 அடி, 30 அடி, 40 அடி சாலைகளில் மனை அமைந்திருந்தால் அதிக விலைக்கு செல்லும்.
மனை, வீடு, கட்டடங்கள் நான்கு தெருக்கள் சந்திக்கும் கார்னர் பகுதியில் அமைந்திருந்தால் எப்போதும் கூடுதல் விலை போகும். கீழ் பகுதியில் கடைகளை கட்டி வாடகைக்கு விட்டு கூடுதல் லாபம் ஈட்டலாம். கீழ் பகுதியில் வீடு கட்டும் பட்டத்தில் இரண்டு பக்கம் வாசல் வைத்து அழகாக வீடு கட்டலாம்
ரியல் எஸ்டேட்டில் முதலீட்டில் தோட்டம், பண்ணை வீடு, வயல் ஆகியவற்றுக்கு பெரும் தேவை இருக்கிறது. ஆனால், இவற்றுக்கான முதலீடு அதிகமாக இருக்கும். அதேநேரத்தில் இவற்றின் மூலம் கிடைக்கும் வருமானமும் அதே அளவு இருக்கும்.தேவைக்கு தொழில் ரீதியாக அல்லது விரும்பத்தின் அடிப்படையில் இவற்றை வாங்குவது நல்லது. மற்றபடி முதலீட்டு நோக்கில் வாங்கினால் நல்ல விலை ஏற்றத்துக்கு மனையை போல் மிக நீண்ட காலம் காத்திருக்க வேண்டும்.
ஃபிசிக்கல் ரியல் எஸ்டேட்டைப் பொறுத்த வரையில் அதை வாங்க அதிக முதலீட்டுத் தொகை தேவை. மேலும், அதை நல்ல விலைக்கு விற்க நீண்ட காலம் காத்திருக்க வேண்டும்.இந்த நிலையில்தான் நவீன ரியல் எஸ்டேட் முதலீடுகள் பொதுமக்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. நவீன ரியல் எஸ்டேட் முதலீடுகள் என்கிறபோது, ரியல் எஸ்டேட் நிறுவனப் பங்குகள், ரியல் எஸ்டேட் மியூச்சுவல் ஃபண்டுகள், ரெய்ட்டுகள், இன்விட்டுகள் போன்றவை உள்ளன. இவற்றில் சில ஆயிரம் ரூபாய்கள் இருந்தால்கூட முதலீட்டை ஆரம்பித்துவிடலாம்.
பட்டியலிடப்பட்ட ரியல் எஸ்டேட் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்வது மூலம் நீண்ட காலத்தில் நல்ல லாபம் ஈட்ட முடியும். ஆனால், குறுகிய காலத்தில் அவை அதிக ரிஸ்க்கானவையும் ஆகும். உதாரணத்துக்கு, நிஃப்டி ரியல்டி குறியீட்டை எடுத்துக் கொள்வோம். இந்தக் குறியீடு 2025 மே 2-ம் தேதி நிலவரப்படி கடந்த ஐந்து ஆண்டுக் காலத்தில் மொத்தம் 370 சதவிகித லாபம் கொடுத்துள்ளது. இதுவே கடந்த ஓராண்டுக் காலத்தில் பார்த்தால் 8.5% இழப்பைச் சந்தித்துள்ளது. ஆனால், இவற்றில் முதலீடு செய்ய ரியல் எஸ்டேட் துறை பற்றிய கூர்மையான அறிவு இருப்பதோடு, குறிப்பிட்ட நிறுவனம் பற்றி அலசி ஆராய்ந்து பிறகுதான் முதலீடு குறித்த முடிவெடுக்க வேண்டியது அவசியம்.
ஃபிசிக்கல் ரியல் எஸ்டேட்டைப் பொறுத்தவரையில் அதை வாங்க அதிக முதலீட்டுத் தொகை தேவை. மேலும், அதை நல்ல விலைக்கு விற்க நீண்ட காலம் காத்திருக்க வேண்டும்.ஃபிசிக்கல் ரியல் எஸ்டேட்டைப் பொறுத்தவரையில் அது மனை, வீடு, கட்டடம், தோட்டம் என எதுவாக இருந்தாலும் அது கீழ்க்கண்ட காரணங்களால்தான் அதிக லாபம் கொடுப்பதாக இருக்கும்.