ஜனவரி 1 முதல்.. பொதுமக்களுக்கு குட் நியூஸ்.. வங்கிகளுக்கு ஆர்பிஐ எச்சரிக்கை

Published : Dec 08, 2025, 09:46 AM IST

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) 2026 ஜனவரி 1 முதல் புதிய டிஜிட்டல் வங்கி வழிகாட்டுதல்களை அமல்படுத்துகிறது. வாடிக்கையாளர் பாதுகாப்பை அதிகரிப்பது மற்றும் பலவற்றை மாற்றும் விதமாக இந்த விதிகள் வரவுள்ளது.

PREV
12
ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெளியிட்டுள்ள புதிய டிஜிட்டல் வழிமுறைகள், 2026 ஜனவரி 1 முதல் அமலுக்கு வர உள்ளன. புதிய விதிமுறைகள் வங்கிகளின் ஒப்புதல் செயல்முறைகளை கடுமையாக்கும், வாடிக்கையாளர் பாதுகாப்பு பொறுப்பை உயர்த்தும் மற்றும் புகார் தீர்க்கும் முறையை வலுப்படுத்தும். குறிப்பாக, வாடிக்கையாளர்களை மொபைல் ஆப் பதிவிறக்கம் செய்ய வற்புறுத்துவது போன்ற புகார்களை கொண்டு இந்த மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன வரப்பட்டுள்ளன. 

வங்கி சேவைகளைப் பெற டிஜிட்டல் வழிகளைத் தவிர வேறு தேர்வு இல்லை என வங்கிகள் அழுத்தமிடுவதைத் தடுக்கவும் ஆர்பிஐ கவனம் செலுத்தியுள்ளது. இணைய வங்கி, மொபைல் வங்கி, மற்றும் பிற மின்னணு தளங்கள் மூலம் வழங்கப்படும் அனைத்து சேவைகளும் இதில் அடங்கும். கணக்கு இருப்பு பார்க்கும் சேவை முதல் கடன் பெறுதல், பணமாற்றுகள், கணக்கு விவரங்கள் பதிவிறக்கம் வரையிலான அனைத்தும் இதன் பகுதியாகும். ஆர்பிஐ விதிகள் வங்கிகளுக்கே பொருந்தும்; NBFC மற்றும் ஃபின்டெக் நிறுவனங்களுக்கு தற்போது பொருந்தாது. 

இருப்பினும், வங்கிகள் இந்த நிறுவனங்களுக்கு சேவைகளை வழங்கினால், அதற்கான ஆர்பிஐ விதிகளை வங்கிகளே பின்பற்ற வேண்டும். முதலில், ‘கோர் பாங்கிங்’ அமைப்பு மற்றும் IPv6 டிராஃபிக் கையாளும் பொது IT வசதி இருக்கும் வங்கிகள், இருப்பு பார்வை சேவையை தரலாம். ஆனால் பரிவர்த்தனை செய்யும் டிஜிட்டல் வங்கி சேவையை துவக்க முன், ஆர்பிஐ-யின் முன்னுரிமை அனுமதி அவசியம்.

22
டிஜிட்டல் வங்கி மாற்றங்கள்

மேலும், சைபர் பாதுகாப்பு சாதனை, நிதி மற்றும் தொழில்நுட்ப திறன், வலுவான உள்கட்டுப்பாடு ஆகியவற்றில் வங்கிகள் தங்களை நிரூபிக்க வேண்டும். வாடிக்கையாளரின் எழுத்துப்பூர்வமான சம்மதம் இல்லாமல் சேவையை தொடங்கவோ நிறுத்தவோ முடியாது. உள்நுழைந்த பிறகு, வங்கிகள் மூன்றாம் தரப்பு விளம்பரங்களை காட்டக்கூடாது. டெபிட் கார்டு அல்லது பிற வங்கி சேவைகளைப் பெற டிஜிட்டல் சானல் பயன்படுத்தப்பட்டது முடியாது. வாடிக்கையாளர் விருப்பப்படி எந்த சேவையை வேண்டுமானாலும் தனித்தனியாகப் பெற முடியும். 

சேவை பதிவு செய்யும்போது, ​​விதிமுறைகள் தெளிவான மற்றும் எளிய மொழியில் விளக்கப்பட வேண்டும்; கட்டண விவரங்கள், உதவி மைய தகவல், புகார் தீர்வு வழி போன்றன குறிப்பாக சொல்லப்பட வேண்டும். அனைத்து பரிவர்த்தனைக்கும், நிதி மற்றும் நித்தியல்லாத செயல்பாடுகளுக்கும், SMS/மின்னஞ்சல் மூலம் அறிவிப்பு அனுப்பப்பட வேண்டும். இந்த மாற்றங்கள் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு மற்றும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தும் என ஆர்பிஐ நம்புகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories