UPI New Rules 2026 : இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்து வரும் நிலையில், ரிசர்வ் வங்கி புதிய முறை ஒன்றை கட்டாயமாக்கி உள்ளது. அது என்ன என்பது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
இந்தியாவில் டிஜிட்டல் முறையில் பண பரிவர்த்தனை செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. ஜிபே(GPay), போன் பே(PhonePe), Paytm, மற்றும் பிற ஆப்கள் மூலம் பண பரிவர்த்தனை நடைபெறுகிறது. அதே நேரத்தில் பண பரிவர்த்தனைகளின் பாதுகாப்பு குறித்த அச்சமும் நிலவி வருகிறது. இந்த நிலையில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அனைத்து டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கும் இரட்டை அங்கீகாரம் கட்டாயமாக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இரட்டை அங்கீகாரம் (Two Factor Authentication) என்றால் என்ன? அதனால் மக்களுக்கு என்ன நன்மை கிடைக்கும்? என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
26
இரட்டை அங்கீகாரம் (2FA) என்றால் என்ன?
சாதாரணமாக நாம் ஒரு கணக்கிற்குள் நுழையவோ அல்லது பணத்தை அனுப்பவோ கடவுச்சொல் மட்டுமே பயன்படுத்தப்படும். ஆனால் இரட்டை அங்கீகாரம் என்பது உங்கள் கணக்கிற்கு இரண்டு அடுக்கு பாதுகாப்பை வழங்குகிறது. முதல் அடுக்கு உங்களுக்கு தெரிந்த கடவுச்சொல் அல்லது பின் நம்பர். இரண்டாவது அடுத்து உங்களிடம் மட்டுமே இருக்கும் ஒன்று. அதாவது போனுக்கு வரும் OTP, கைரேகை அல்லது அங்கீகார ஆப்ஸ். தற்போது டிஜிட்டல் மோசடியாளர்கள் எஸ்எம்எஸ், போலி அழைப்புகள் போன்ற ஏமாற்று வழிகளைப் பயன்படுத்தி சாமானிய மக்களிடம் எளிதாக விவரங்களை திருடி வருகின்றனர்.
36
2FA செயல்படும் முறைகள்
ஆனால் இரட்டை அங்கீகாரம் முறை கொண்டுவரப்பட்டால் மோசடி செய்வது கடினமானதாக மாறிவிடும். இதன் மூலம் மோசடிகள் பெரிய அளவில் குறையும். முதல் அடுக்கு பாதுகாப்பை திருடினாலும், இரண்டாவது அடுக்கு பாதுகாப்பில் உள்ள பயோமெட்ரிக் தரவுகள், OTP போன்றவற்றை மோசடியாளர்களால் எளிதில் திருட முடியாது. உதாரணமாக உங்கள் முதல் அடுக்கு கடவுச்சொல் ஒருவருக்கு தெரிந்தாலும், மொபைல் போனுக்கு வரும் ஓடிபி அல்லது கைரேகை இல்லாமல் அவர்களால் பணத்தை திருட முடியாது. இது ஒரு வீட்டுக்கு ஒரு பூட்டிற்கு பதிலாக, இரண்டு பூட்டுகள் கொண்டு பூட்டி வைப்பது போன்றதாகும். ஒரு பூட்டு உடைந்தாலும் மற்றொன்று பாதுகாப்பை உறுதி செய்யும். ஆனால் சாவியை பத்திரமாக வைத்திருப்பது நம் கையில் தான் உள்ளது. எனவே PIN நம்பர் போன்றவற்றை யாரிடமும் பகிரக்கூடாது.
இந்தியாவில் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, யுபிஐ மூலம் செய்யப்படும் ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு அடிஷனல் ஃபேக்டர் ஆப் ஆதண்டிகேஷன் எனப்படும் கூடுதல் அங்கீகாரம் ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தற்போது எஸ்எம்எஸ் மூலமான ஓடிபிகளுக்கு பதிலாக பயோமெட்ரிக், கைரேகை, முக அங்கீகாரம் அல்லது பிரத்தியேக ஆதண்டிகேஷன் ஆப்பை பயன்படுத்த ஊக்குவிக்கப்படுகிறார்கள். இதனால் உங்கள் கணக்கு மோசடியாளர்களால் திருடப்படுவது 99% தடுக்கப்படுகிறது. டிஜிட்டல் மோசடிகள் அதிகரித்து வருவதால் மக்கள் பணத்தை பாதுகாப்பாக வைப்பதற்கு உத்தரவாதம் அளிக்கும் வண்ணம் ரிசர்வ் வங்கி இத்தகைய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
56
ஏப்ரல் 1 முதல் டிஜிட்டல் பணம் செலுத்தும் முறைகள் எவ்வாறு மாறும்
ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் நீங்கள் செய்யும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு இரண்டு அங்கீகார முறைகள் தேவைப்படலாம். உதாரணமாக ஜிபே அல்லது போன்பே வழியாக பரிவர்த்தனை செய்யும் பொழுது முதல் அடுக்கு பின் நம்பரை பதிவிட்ட பிறகு இரண்டாவது ஒப்புதலை பயனர் கொடுக்க வேண்டியிருக்கலாம். இது சற்று கூடுதல் நேரம் எடுக்கக்கூடும். ஆனால் இது உங்கள் பணத்தை மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும். இது ஆரம்பத்தில் சற்று சிரமமாக தோன்றினாலும் உங்கள் பணத்தை பாதுகாப்பதற்கு ரிசர்வ் எடுத்துள்ள முக்கிய நடவடிக்கை என்பதை நினைவில் கொள்ளுங்கள். ரிசர்வ் வங்கி எடுத்துள்ள இந்த முயற்சி இந்தியாவின் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை பாதுகாப்பான அம்சத்துடன் முன்னெடுத்துச் செல்ல உதவும்.
66
குறைந்த தொகைக்கு இது தளர்த்தப்படலாம்
பரிவர்த்தனைகளை எளிதாக சிறிய அளவிலான தொகைகளுக்கு உதாரணமாக ரூ.5,000 க்கு கீழ் அனுப்பப்படும் தொகைகளுக்கு சில சமயங்களில் இந்த விதிமுறை தளர்த்தப்படலாம். இருப்பினும் உங்கள் சேமிப்பை பாதுகாக்க எப்போதும் 2 பேக்டர் ஆதண்டிகேஷனை (Two Factor Authentication) செயல்படுத்துவது சிறந்தது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.