இனி பர்சனல் லோன் வாங்குவது கஷ்டம்; சாமானிய மக்களின் அடிமடியில் கைவைத்த ஆர்பிஐ; முழு விவரம்!

First Published | Jan 7, 2025, 8:12 AM IST

இந்தியாவில் பர்சனல் லோன் வாங்க ஆர்பிஐ பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம். 

Reserve Bank Of India

பர்சனல் லோன்

இந்தியாவில் வீட்டுக்கடன், கல்விக்கடன், வேலைவாய்ப்புக் கடன் மற்றும் கார், பைக்குகளுக்கு லோன் என பெரும்பாலான மக்கள் கடன் வாங்கித் தான் வாழ்க்கையை ஓட்டி வருகின்றனர். அதிலும் பர்சல் லோன் எனப்படும் தனிநபர் கடன்களை அதிகமானோர் வாங்குகின்றனர். குறிப்பாக அவசர மருத்துவ செலவுகள் உள்ளிட்ட பல்வேறு செலவுகளுக்கு பர்சனல் லோன் வாங்கி வருகின்றனர்.

இந்தியாவில் தனியார் வங்கிகள் உள்பட ஏராளமான தனியார் நிதி நிறுவனங்கள் பர்சன்ல் லோன்களை கொட்டிக் கொடுக்கின்றன. குறைந்த வட்டி, குறைந்த இஎம்ஐ என ஆசைகாட்டி பெரும்பாலானவர்களை பர்சனல் லோன்களை வாங்க வைத்து விடுகின்றன. இதில் பலர் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வாங்கிய பர்சனல் லோன் முடிவதற்குள் மற்றொரு நிறுவனத்தில் லோன் வாங்கி வருகின்றனர். 
 

Personal Loans

ஆர்பிஐ கட்டுப்பாடு 

இந்நிலையில், இந்தியாவில் பர்சனல் லோன் வாங்குபவர்களுக்கு ஆப்பு வைக்கும் விதமாக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. அதாவது பர்சனல் லோன் வாங்குபவர்களின் கிரெடிட் ஸ்கோர் உள்ளிட்ட கடன் பதிவேடுகளை இனிமேல் 15 நாட்களுக்கு ஒருமுறை தெரிவிக்க வேண்டும் என கடன் வழங்கும் தனியார் நிதி நிறுவனங்கள், வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் இந்த கட்டுப்பாடுகள் ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. இதன் காரணமாக எந்தவொரு பர்சனல் லோனும் இப்போது கடுமையான ஆய்வுக்கு உட்படுத்தப்படும். 15 நாட்களுக்கு ஒருமுறை கிரெட் ஸ்கோர் சரிபார்க்கப்படும் என்பதால் ஒரு இடத்தில் பர்சனல் லோன் வாங்கியவர்கள் அதை முழுமையாக திருப்பிச் செலுத்தாமல், மற்றொரு இடத்தில் இனிமேல் பர்சனல் லோன் வாங்க முடியாது. 

அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களுக்கு குட் நியூஸ்.. H-1B விசா குறித்த முக்கிய அப்டேட்!

Tap to resize

Personal Loans Interest Rate

கிரெடிட் ஸ்கோர் சரிபார்ப்பு 

கடன் அபாய மதிப்பீட்டு முறையை மேம்படுத்த ரிசர்வ் வங்கி இந்த புதிய நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும், தேவையற்ற கடன் வாங்குவதை நிறுத்துவது இதன் நோக்கம் என்றும் பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். ரிசர்வ் வங்கியின் கடுமையான விதிமுறைகளால், இந்த ஆண்டு பெர்சனல் லோன் புழக்கம் பெருமளவில் நிறுத்தப்படும்.

கிரெடிட் ஸ்கோர் உள்ளிட்ட கடன் பதிவேடுகளை 15 நாட்களுக்கு ஒருமுறை சரிபார்ப்பதன் மூலம், கடன் பெறுபவர்கள் திருப்பி அளிக்கும் திறனை அறிந்து கொண்டு கடன் வழங்கும் நிறுவனங்கள் செயல்பட முடியும்.
 

Impact on People

சாமானிய மக்களுக்கு பாதிப்பு 

இந்த உத்தரவை ரிசர்வ் வங்கி கடந்த ஆகஸ்ட் மாதமே அறிவித்த நிலையில், புத்தாண்டின் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த உத்தரவு சாமானிய மக்களின் அடிமடியில் கைவைப்பது போல் அமைந்துள்ளது. ஏனெனில் இந்தியாவில் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் தான் அதிகளவில் பர்சனல் லோன் வாங்குகின்றனர். 

பண்டிகை காலச் செலவுகள், அவசர மருத்துச்செலவுகளுக்கு அவர்களுக்கு கைகொடுப்பது இந்த பர்சனல் லோன்கள் தான். இப்போது இதிலும் ஆர்பிஐ கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது சாமானிய மக்களுக்கு பேரிடியாக அமைந்துள்ளது.

EPFO 3.0 ரிலீஸ் தேதி அறிவிப்பு! இனி PF பணம் ஏடிஎம்மில் ஈசியா எடுக்கலாம்!
 

Latest Videos

click me!