செப்டம்பர் மாதத்தில் பல்வேறு பண்டிகைகளால் நாடு முழுவதும் வங்கிகள் விடுமுறை அளிக்கப்படும். சில நகரங்களில் தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் வங்கிகள் மூடப்படும். ஆன்லைன் வங்கிச் சேவைகள் மற்றும் ஏடிஎம்கள் வழக்கம் போல் செயல்படும்.
செப்டம்பர் மாதம் நாடு முழுவதும் பல்வேறு பண்டிகைகளை முன்னிட்டு வங்கிகள் மூடப்பட்டிருக்கும். சில மாநிலங்களில் தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் வங்கிகள் செயல்படாது என்பதால், வங்கி சேவைகளைப் பயன்படுத்த நினைப்பவர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு வைத்துக்கொள்ள வேண்டும். விடுமுறையால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, வங்கிப் பணிகளை முன்கூட்டியே செய்து முடிப்பது நல்லது.
25
செப்டம்பர் 4 விடுமுறை
அவசர தேவைகளுக்கு ஆன்லைன் வங்கிச் சேவைகள் உதவும். செப்டம்பர் 4 மற்றும் 5ஆம் தேதிகளில் முக்கிய பணிகள் இருந்தால், அதை முன்பே நிறைவேற்றிக் கொள்ளுங்கள். விடுமுறை நாட்களிலும் வங்கி தொடர்பான சில சேவைகள் தொடர்ந்து செயல்படும். உதாரணமாக, UPI, NEFT, RTGS, மொபைல் வங்கி சேவைகள் 24x7 செயல்படும்.
35
ஏடிஎம் சேவைகள்
மேலும், ஏடிஎம் மூலம் பணம் எடுப்பதும் செலுத்துவதும் எந்தக் காலத்திலும் சாத்தியமே. எனவே, வங்கி மூடப்பட்டாலும் அடிப்படை பணிகள் தடைபடாது. இன்று (செப்டம்பர் 4ஆம் தேதி) ஓணம் பண்டிகையை முன்னிட்டு கொச்சி, திருவனந்தபுரம் உள்ளிட்ட கேரளாவின் பல நகரங்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
அதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 5ஆம் தேதி ஈத்-உல்-மிலாத் பண்டிகையை முன்னிட்டு மும்பை, டெல்லி மற்றும் ஹைதராபாத் நகரங்களில் வங்கிகள் இயங்காது. செப்டம்பர் 6ஆம் தேதி, ஈத்-உல்-மிலாத் காரணமாக ஜம்மு, ராய்ப்பூர், ஸ்ரீநகர் மற்றும் கங்க்டாக் நகரங்களில் வங்கிகள் மூடப்படும். மேலும், செப்டம்பர் 12ஆம் தேதி ஜம்மு மற்றும் ஸ்ரீநகரிலும் பண்டிகை விடுமுறை காரணமாக வங்கிகள் திறக்கப்படாது.
55
ஆன்லைன் வங்கி சேவைகள்
அதன் பிறகு, செப்டம்பர் 22ஆம் தேதி நவராத்திரி தொடக்க விழாவை முன்னிட்டு ஜெய்ப்பூர் நகரில் வங்கிகள் மூடப்படும். அதேபோல, செப்டம்பர் 23ஆம் தேதி மகாராஜா ஹரி சிங் ஜெயந்தி கொண்டாட்டத்தை முன்னிட்டு ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் வங்கிகள் மூடப்படும். மாத இறுதியில், செப்டம்பர் 29ஆம் தேதி துர்காஷ்டமி பண்டிகையை முன்னிட்டு கொல்கத்தா, பாட்னா, கவுகாத்தி, அகர்தலா மற்றும் புவனேஸ்வர் உள்ளிட்ட நகரங்களில் வங்கிகள் செயல்படாது.