Ration Card Update: 3 மாத கால அவகாசம்! முடங்கிய ரேஷன் கார்டை மீண்டும் செயல்படுத்துவது எப்படி?

Published : Sep 30, 2026, 12:17 PM IST

உங்க ரேஷன் கார்டு முடக்கப்பட்டால் கவலை வேண்டாம்! 3 மாத கால அவகாசத்திற்குள் e-KYC செய்து முடங்கிய ரேஷன் கார்டை மீண்டும் செயல்படுத்துவது எப்படி? முழு விவரங்கள் உள்ளே!

PREV
15
மத்திய அரசு என்ன செய்ய போகிறது.?!

இந்தியாவில் பொது விநியோகத் திட்டத்தை (PDS) முற்றிலும் சீரமைக்கவும், தகுதியான ஏழை எளிய மக்களுக்கு மட்டுமே உணவு தானியங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் சென்றடைவதை உறுதி செய்யவும் ஒன்றிய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கடந்த 6 மாதங்களுக்கும் மேலாகத் தொடர்ந்து பொருட்கள் வாங்காமல் 'செயல்படாத நிலையில்' (Inactive Cards / Silent Cards) இருக்கும் சுமார் 1.58 கோடி ரேஷன் கார்டுகளை அக்டோபர் 1 முதல் தற்காலிகமாக முடக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதையும் கிளிக் செய்யலமே - Farmer Subsidy: ரூ.58,000 மானியம் + அதிக வருமானம்.! விவசாயிகள் பெறுவது எப்படி ? யார் யாருக்கு கிடைக்கும்?

25
கார்டுகள் முடக்கப்படுவதற்கான பின்னணியும் முக்கிய காரணங்களும்

பொது விநியோக முறையில் உள்ள முறைகேடுகளையும், கசிவுகளையும் தடுப்பதே இந்த நடவடிக்கையின் முதன்மை நோக்கமாகும்.

  1. பயன்பாடற்ற நிலை (Silent Cards): தொடர்ந்து 6 மாதங்களுக்கு மேலாக எந்தப் பொருளும் வாங்கப்படாமல் முடங்கிக் கிடக்கும் ரேஷன் கார்டுகள்.
  2. இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்படாமை: குடும்பத்தில் இறந்த நபர்களின் பெயர்களை நீக்காமல் தொடர்ந்து அட்டையில் வைத்திருப்பது.
  3. இடம் பெயர்வு மற்றும் முகவரி மாற்றம்: வேறு ஊர்களுக்கோ அல்லது மாநிலங்களுக்கோ குடிபெயர்ந்த பிறகும் பழைய பதிவுகளை நீக்காமல் வைத்திருப்பது.
  4. போலி மற்றும் இரட்டை பதிவுகள்: தகுதியற்ற முறைகளில் புழக்கத்தில் இருக்கும் போலி கார்டுகள் மற்றும் ஒரே நபரின் பெயர் அட்டைகளில் இடம்பெற்றிருப்பது.

தற்போது நாடு முழுவதும் சுமார் 20.4 கோடி ரேஷன் கார்டுகள் மூலம் 80.6 கோடிக்கும் அதிகமான மக்கள் இலவச மற்றும் மானிய விலையிலான உணவு தானியங்களை பெற்று பயனடைந்து வருகின்றனர். இதையும் கிளிக் செய்யலமே - Gold Loan: தங்க நகைக் கடன் சீக்ரெட்.! 1 பவுனுக்கு எவ்வளவு லோன்? எந்த வங்கியில் அதிக பணம் கிடைக்கும்?

35
3 மாத அவகாசம்: உடனடி நீக்கம் இல்லை

ரேஷன் கார்டுகள் அக்டோபர் 1 முதல் தற்காலிகமாக முடக்கப்பட்டாலும், பயனாளிகளின் பெயர்கள் உடனடியாக ரேஷன் பட்டியலிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படாது. உண்மையான பயனாளிகள் விடுபட்டுவிடக் கூடாது என்பதற்காக, முடக்கப்பட்ட அட்டைகளை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டுவர 3 மாத காலம் (அக்டோபர் 1 முதல் ஜனவரி 1 வரை) கால அவகாசம் வழங்கப்படுகிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் உரிய கள ஆய்வும் (Field Verification) மற்றும் இ-கேஒய்சி (e-KYC) சரிபார்ப்பும் நடத்தப்படும். இதையும் கிளிக் செய்யலமே - D-Mart தீபாவளி ஷாப்பிங் 2026.! மளிகைப் பில்லில் ரூ.1,500 வரை சேமிப்பது எப்படி? முழு வழிகாட்டி!

45
முடக்கப்பட்ட ரேஷன் கார்டை மீண்டும் புதுப்பிப்பது எப்படி?

தற்காலிகமாக முடக்கப்பட்ட தங்கள் ரேஷன் கார்டுகளை மீண்டும் புதுப்பித்துச் செயல்படுத்த பயனாளிகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்:

அருகிலுள்ள ரேஷன் கடைக்குச் செல்லுதல்: குடும்பத் தலைவர் மற்றும் ரேஷன் கார்டில் இடம்பெற்றுள்ள அனைத்து உறுப்பினர்களும் தங்களின் பகுதிக்குட்பட்ட நியாயவிலைக் கடைக்கு (Fair Price Shop) நேரில் செல்ல வேண்டும்.

பயோமெட்ரிக் e-KYC சரிபார்ப்பு: ரேஷன் கடையில் உள்ள இ-போஸ் (e-PoS) இயந்திரம் மூலம் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் பயோமெட்ரிக் (கைரேகை அல்லது விழித்திரை) சரிபார்ப்பை மேற்கொள்ள வேண்டும்.

இதையும் படிக்கலாமே -Pure Ghee: சுத்தமான நெய்யைக் கண்டுபிடிப்பது எப்படி? ஆர்கானிக் நெய் என்றால் என்ன? முழு விவரம்!

ஆதார் இணைப்பு மற்றும் மொபைல் எண் பதிவு: ஆதார் எண்ணுடன் ரேஷன் கார்டு சரியாக இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிசெய்து, தற்போதைய கைபேசி எண்ணை (Mobile Number)Seed செய்து புதுப்பிக்க வேண்டும்.

இணையவழிச் சரிபார்ப்பு: மாநில உணவளிப்புத் துறை போர்ட்டல்கள் அல்லது பொதுச் சேவை மையங்கள் (CSC) மூலமாகவும் இ-கேஒய்சி தகவல்களைச் சரிபார்த்துக் கொள்ளலாம். இதையும் கிளிக் செய்யலமே -  Coriander: கொத்து கொத்தா வளரும் கொத்தமல்லி.! கெத்தா வீட்டிலேயே வளர்ப்பது எப்படி தெரியுமா?!

55
e-KYC நடைமுறை கட்டாயம்.!

எச்சரிக்கை மற்றும் பொதுமக்களுக்கான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ள 3 மாத கால அவகாசத்திற்குள் e-KYC மற்றும் சரிபார்ப்புச் செயல்முறைகளை முடிக்காத பட்சத்தில், அந்த ரேஷன் கார்டுகள் தரவுத்தளத்தில் இருந்து (Database) நிரந்தரமாக நீக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது. எனவே, நீண்ட நாட்களாக ரேஷன் பொருட்கள் வாங்காத குடும்பங்கள், உடனடியாகத் தங்கள் அருகில் உள்ள ரேஷன் கடைகளைத் தொடர்புகொண்டு e-KYC நடைமுறையை முடித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதையும் கிளிக் செய்யலமே - Govt Scheme: ரூ.7.50 லட்சம் வரை மானியம் தரும் தமிழக அரசு.! விவசாயிகள் உடனே அப்ளை செய்ய வேண்டிய நேரம் இது.!

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories