Published : Sep 22, 2026, 08:54 AM ISTUpdated : Sep 22, 2026, 08:59 AM IST
அக்டோபர் 1 முதல் லட்சக்கணக்கான ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட உள்ளன. அதற்கான காரணத்தையும், கார்டு முடங்கினால் உடனடியாக என்ன செய்ய வேண்டும் என்பதையும் இப்போது பார்ப்போம்.
ரேஷன் கார்டை தொடர்ந்து செயல்பாட்டில் வைத்திருக்க குறைந்தபட்சம் ஒருமுறையாவது ரேஷன் கடையில் பொருட்களை வாங்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. நீண்ட நாட்களாக பொருட்கள் வாங்காமல் இருக்கும் குடும்ப அட்டைகள் குறித்து ஆய்வு நடைபெறுவதால், பொதுமக்கள் தங்களது கார்டின் நிலையை உறுதி செய்து கொள்வது அவசியம். ஒருவேளை உங்கள் ரேஷன் கார்டு முடக்கப்பட்டிருந்தால், அக்டோபர் 1, 2026 முதல் e-KYC எனப்படும் மின்னணு முறையிலான அடையாள சரிபார்ப்பை மேற்கொண்டு மீண்டும் கார்டை செயல்பாட்டுக்கு கொண்டு வரலாம். இதற்காக அருகிலுள்ள ரேஷன் கடை அல்லது சம்பந்தப்பட்ட உணவுத்துறை அலுவலகத்தை அணுகி தேவையான வழிமுறைகளைத் தெரிந்து கொள்ளலாம். குடும்ப அட்டை விவரங்களையும் முன்கூட்டியே சரிபார்த்துக் கொள்வது நல்லது. இதையும் படிக்கலாமே- மூட்டைக்கு காசு கேட்டால் முடிந்தது கதை.! வாட்ஸ்அப்பில் புகார் தட்ட உத்தரவிட்ட தமிழக அரசு!
55
கார்டுகளை ரத்து செய்யும் பணி தொடங்கிடுச்சு
நீண்ட நாட்களாக ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்காமல் இருக்கும் குடும்ப அட்டைதாரர்களின் கார்டுகளை ஆய்வு செய்து, தகுதியற்ற அல்லது செயல்பாட்டில் இல்லாத கார்டுகளை நீக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் உங்கள் ரேஷன் கார்டு தற்போது செயல்பாட்டில் உள்ளதா என்பதை முன்கூட்டியே சரிபார்த்துக் கொள்வது நல்லது. கார்டின் நிலை குறித்து சந்தேகம் இருந்தால், அருகிலுள்ள ரேஷன் கடை விற்பனையாளரை அணுகி விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம். தேவையான தகவல்களைப் பெற மாநில உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அலுவலகத்தையும் தொடர்பு கொள்ளலாம். உங்கள் குடும்ப அட்டையில் பெயர், முகவரி, குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட விவரங்கள் சரியாக உள்ளதா என்பதையும் ஒருமுறை சரிபார்த்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் எதிர்காலத்தில் ரேஷன் பொருட்கள் பெறுவதில் ஏற்படக்கூடிய சிக்கல்களைத் தவிர்க்க முடியும். இதையும் படிக்கலாமே- ரூ.1,00,000 மானியம் தரும் தமிழக அரசு.! எதுக்கு தெரியுமா? யாருக்கெல்லாம் கிடைக்க போகுது தெரியுமா?
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.